

சென்னை: சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவை அக்.11-ம் தேதி தொடங்கியது.
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் பயணிகளின் கோரிக்கை அடிப்படையில், இத்தடத்தில் நாளை (அக்.23) முதல் காலை 6 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை நெரிசல் மிகுந்த நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
மற்ற நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் 15 நிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். வடபழனி, பூந்தமல்லியில் இருந்து கடைசி ரயில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.