‘குலுக்கல்’ அதிபரின் மனைவிக்கு இலைக் கட்சி க்ரீன் சிக்னல் | உள்குத்து உளவாளி

‘குலுக்கல்’ அதிபரின் மனைவிக்கு இலைக் கட்சி க்ரீன் சிக்னல் |  உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘குலுக்கல்’ அதிபரின் மனைவி ‘வேந்தர்’ கட்சியிலிருந்து வெளியேறி இலைக் கட்சியில் ஐக்கியமாகி இருக்கிறார்.

பழைய கட்சியில், தான் கேட்டது கிடைக்கவில்லை என்றாலும் போகும் இடத்தில் கேட்டது அப்பீல் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பற்காக, பெரிய நோட்டில் 300 நோட்டை கட்சி வளர்ச்சி நிதியாக எண்ணிக் கொடுத்திருக்கிறாராம் ‘குலுக்கல்’ அதிபரின் மனைவி.

இதையடுத்து அவருக்கு சேலம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏதாவது தொகுதியை ஒதுக்கலாம் என இலைக்கட்சி தலைமை சொல்லி இருந்தது. இந்த நிலையில், மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ‘குடி’ தொகுதியை ‘குலுக்கல்’ அதிபரின் மனைவி கோடிட்டுக் கேட்டாராம். அந்தத் தொகுதியில் தனது இனத்தார் பெருமக்கள் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணமாம்.

இருந்த போதும் இதை இலைக் கட்சி தலைமையிடம் நேரடியாகக் கேட்காமல் தனது பிராண நாதர் மூலம் டெல்லி ‘உள்துறை’ தலைவரிடம் சொல்லி பேசவைத்தாராம் ‘குலுக்கல்’ அதிபர் மனைவி, ‘உள்துறையே’ சொல்லிவிட்டதால் மறுத்துப் பேசமுடியாத இலைக் கட்சி தலைமை, “மலைக்கோட்டை மாவட்டத்து ‘குடி’ தொகுதி உங்களுக்குத்தான். நீங்கள் தேர்தல் வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்கலாம்” என க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாம்.

‘குலுக்கல்’ அதிபரின் மனைவிக்கு இலைக் கட்சி க்ரீன் சிக்னல் |  உள்குத்து உளவாளி
“ரூ.5 ஆயிரம் கொடுப்பதால் மட்டும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” - கார்த்தி சிதம்பரம் கணிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in