குழப்பத்தில் ‘வாசனை’ தலைவர் | உள்குத்து உளவாளி

குழப்பத்தில் ‘வாசனை’ தலைவர் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘வாசனை’ தலைவர் தான் தாமரைக் கூட்டணியில் முதல் ஆளாக இடம் பிடித்தவர். ஆனால், அவருக்கான கோட்டாவைக் கொடுப்பதில் இலைக் கட்சி தலைவர் இன்னமும் முரண்டு பிடிக்கிறாராம். ‘வாசனை’ தலைவர் தங்களுக்கு மூன்று தொகுதிகள் வேண்டும் என்றும் எங்களை தனி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்கிறாராம்.

ஆனால், இலைக் கட்சி தலைவர் “எங்கள் கைவசம் இருந்த கோட்டா முடிந்துவிட்டது. இனி நீங்கள் தாமரைக் கட்சியிடம் தான் பேசவேண்டும்” என்று கைவிரிக்கிறாராம்.

தாமரைக் கட்சியோ, எங்களால் உங்களுக்கு ஒரு தொகுதி தரமுடியும். அதற்கு சம்மதம் என்றால் நமது சின்னத்திலேயே போட்டியிடுங்கள்” என்று தங்கள் பங்கிற்கு இழுக்கிறதாம். இதனால் ஒருவித குழப்பத்தில் இருக்கும் ’வாசனை’ தலைவர், “ஆளும் கட்சியிலும் எதிர்க் கட்சியிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்” என்று ’தேர்தல் களத்துக்கு’ புதிதாக மெசேஜ் சொல்ல ஆரம்பித்திருக்கிறாராம்.

குழப்பத்தில் ‘வாசனை’ தலைவர் | உள்குத்து உளவாளி
வைகை நகரின் வடக்குத் தொகுதி மல்லுக்கட்டு| உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in