வைகை நகரின் வடக்குத் தொகுதி மல்லுக்கட்டு| உள்குத்து உளவாளி

வைகை நகரின் வடக்குத் தொகுதி மல்லுக்கட்டு| உள்குத்து உளவாளி
Updated on
1 min read

வைகை நகரின் வடக்குத் தொகுதியை மையப்படுத்தி கதர் கட்சியின் ‘ஜெம்’ புள்ளி கொளுத்தி விட்ட நெருப்பு இன்னும் அணையாமல் ஜம்மென்று புகைந்து கொண்டே இருக்கிறதாம். இந்த முறை தனது மாமனாருக்கு வைகை நகர் வடக்கு தொகுதியைக் கேட்டும் பெறும் முயற்சிகளில் இருந்தாராம் ‘ஜெம்’ புள்ளி.

இந்த மூவ்கள் தெரிந்து தான் அந்தத் தொகுதியின் அதிகாரக் கட்சி ‘கமாண்டர்’ எம்எல்ஏ, தாம் தூம் எனக் குதித்திருக்கிறார். தலைமை அழைத்து கண்டித்த பிறகு ‘கமாண்டர்’ கப் சிப் ஆகிவிட்டாலும். ‘ஜெம்’ இன்னும் தனது ‘ஜம்பை’ நிறுத்தவில்லையாம்.

விடுமுறை நாளில் டெல்லியிலிருந்து ஊர்ப் பக்கம் வந்தவர், வைகை நகர் மாவட்டத்தின் சொந்தக் கட்சி மாவட்ட ‘தலைகளை’ அழைத்து ரகசியக் கூட்டம் போட்டாராம் திருவாளர் ‘ஜெம்’.

அப்போது, “வைகை நகர் வடக்கில் என் மாமனாருக்கு சீட் கிடைக்கிறதோ இல்லையோ... இந்த முறை அதிகாரக் கட்சி தரப்பில் பழையபடியும் ‘கமாண்டரே’ போட்டியிட்டால் பெறவு நம்மளும் நம்ம வேலையக் காட்டிட வேண்டியது தான்” என்று கொம்பு சீவிவிட்டுப் போயிருக்கிறாராம்.

வைகை நகரின் வடக்குத் தொகுதி மல்லுக்கட்டு| உள்குத்து உளவாளி
குக்கர் தலைவருக்கு ‘நாச்சியார்’ பெண்மணி குட்பை சொன்னது ஏன்? | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in