அருவி மாவட்ட ‘ப்ரைட் கிங்’ சலசலப்புகள் | உள்குத்து உளவாளி

அருவி மாவட்ட ‘ப்ரைட் கிங்’ சலசலப்புகள் | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

சங்கடமான ‘ஷார்ட் மெசேஜ்’ விவகாரம் வாகைக் கட்சியை சந்தி சிரிக்க வைத்திருக்கும் நிலையில், இன்னும் பல பேர் இப்படியான ‘சமாச்சாரங்களில்’ சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டே வருகிறார்களாம்.

அந்த வகையில், அருவி மாவட்டத்தின் மையப் பகுதிக்கு செயலாளராக இருக்கும் ‘ப்ரைட் கிங்’கும் மைனர் வேஷம் கட்டி அலைகிறாராம். மாவட்ட தலைநகரில் இந்த கிங்கிற்கு சீட் கொடுத்தது வாகைத் தலைமை. ஆனால், நாமெல்லாம் என்னத்த கரை ஏறுனோம் என்ற ஊசலாட்டத்தில் இருந்த கிங், தன்னை எதிர்த்து நின்ற சூரியக் கட்சி கதிரானவரிடம் வெயிட்டாக ஒரு ‘செட்டில்மென்ட்டை’ வாங்கிக் கொண்டு சைலண்ட் ஆகிவிட்டாராம். கடைசி நேரத்தில் வாக்குக் கேட்கக்கூட நேரமில்லாமல் ‘படுத்துக்’ கொண்டாராம்.

இதனால் அங்கு சூரியக் கட்சி வேட்பாளரே கொடி நாட்டினார். இந்த நிலையில், இப்போது எங்கெல்லாம் வரும்படி வரும் என்று தேடிப்பிடித்து வசூல் வேட்டை நடத்தி வருகிறாராம் மிஸ்டர் ‘ப்ரைட் கிங்’.

அரசு வழக்கறிஞர் பதவிக்காக மட்டுமே 8 பேரிடம் வெயிட்டாக ‘கட்டிங்’ போட்டிருக்கிறாராம். தனது மாவட்டத்துக்குள் வரும் 8 ஒன்றியம், 4 நகரம், 4 பேரூராட்சிகளில் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை மாற்றிவிட்டு புதிதாக ஆட்களை நியமிப்பதில் இப்போது அண்ணன் மும்முரமாய் இருக்கிறாராம்.

‘கேட்டதைக்’ கொடுப்பவர்களுக்கு பதவி தப்பும். இல்லாவிட்டால் கேட்டதும் ‘கொடுப்பவர்களுக்கு’ பதவி போய்விடும் என மிரட்டிக் கொண்டிருக்கிறாராம். இதையெல்லாம் மிஞ்சும் விதமாக, கட்சியில் இருக்கும் ‘சத்யமான’ பெண்மணியை கழுத்தில் மைனர் செயினைப் போட்டு மயக்கி அவருடன் மினி வாழ்க்கையே வாழ்ந்துவிட்டாராம் ‘ப்ரைட் கிங்’.

ஆனால், சொன்னபடி அந்த அம்மணிக்கு எதுவும் செய்து கொடுக்காதவர், சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாக அடுத்த ‘கிளைக்கு’ தாவி விட்டாராம். இதனால் உச்சகட்ட டென்ஷனில் இருக்கும் சத்யமான பெண்மணி, ‘ப்ரைட் கிங்க்’ தன்னையே மையல் கொண்டு சுற்று வந்த போது கொஞ்சிக் கொட்டிய வசனங்களை எல்லாம் கோத்து இப்போது பொதுவெளியில் எடுத்துவிட ஆரம்பித்திருக்கிறாராம்.

இது தொடர்பாக சக தோழி ஒருவரிடம் போனில் அவர் பேசிய ‘க்ரீன்’ வசனங்கள் இப்போது தொகுதியின் திக்கெட்டும் சுற்றுகிறது. “அம்மு... என் செல்லம்... உன்ன மாதிரி இருக்க முடியாதுடா. உன்ன மாதிரி ட்ரெஸ் பண்ண முடியாதுடான்னு சொல்லி என்கிட்ட வந்தவன் தானே... இப்பவே இப்படி இருக்கான். இன்னும் வாரியத் தலைவரெல்லாம் ஆகிட்டான்னா அவ்வளவு தான்.

இந்த விஷயத்துல நான் ரோட்டுல நின்னாலும் பரவால்ல. அவனை சந்தி சிரிக்க வைக்காம விடமாட்டேன்” என்று தைரியமாகச் சொல்லி வரும் சத்யமான பெண்மணி கூடிய சீக்கிரமே மீடியா கச்சேரியைக் கூட்டுவார் என்கிறார்கள் அருவி மாவட்டத்து அரசியல்வாதிகள்.

அருவி மாவட்ட ‘ப்ரைட் கிங்’ சலசலப்புகள் | உள்குத்து உளவாளி
‘குறிச்சி’ தொகுதியும், வாகைக் கட்சி நகர்வுகளும் | உள்குத்து உளவாளி

X