கதர் பார்ட்டி சீனியர்களின் புதிய முயற்சி | உள்குத்து உளவாளி

கதர் பார்ட்டி சீனியர்களின் புதிய முயற்சி | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

சூரியனுக்கும் கதருக்கும் இனி எந்தக் காலத்திலும் ஒட்டுமிருக்காது உறவுமிருக்காது என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், உறவை மீண்டும் புதுப்பிக்க கதர் பார்ட்டியின் சீனியர் தலைகள் சிலர் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்களாம்.

நம்பிக்கையான சூரியக் கட்சியின் தோழமையை இழந்ததால் தேசிய அளவில் தங்களது பார்ட்டிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கட்சி தலைவியிடம் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தமிழகத்து சீனியர் தலைகள் நேரிலும் தூதுவர்கள் மூலமாகவும் ஓதிக்கொண்டே இருக்கிறார்களாம். கூடவே, விசில் தலைவரின் ‘பிரதமர் பிம்பம்’ குறித்தும் பாஜக எதிர்ப்பில் அவர் மீதான நம்பகத்தன்மை குறித்தும் தலைவியிடம் சந்தேகம் எழுப்பி வருகிறார்களாம்.

மேலும், ஆரம்பத்திலிருந்தே சூரியத் தலைமையை சூடேற்றி வந்தவரும் விசில் கூட்டணிக்கு விதை போட்டவருமான சொந்தக் கட்சியின் சர்ச்சைப் புள்ளி கதரை மறந்து காவித் தலைவர்களுடன் நெருக்கம் பாராட்டி வருவது குறித்தும் சந்தேகம் கிளப்பியவர்கள், “இவர்களை எல்லாம் நம்பித்தான் நாம் நம்பிக்கையான பார்ட்னரை இழந்துவிட்டோம்” என்று சொன்னார்களாம்.

பாஜக தலைமையை எதிர்த்து சூரியக் கட்சித் தலைவர் நடத்திய அரசியலையும் இப்போது விசில் தலைவர் நடத்தி வரும் அரசியலையும் ஒப்பிட்டு அண்மையில் கடிதம் ஒன்றையும் தலைவிக்கு அனுப்பி இருப்பவர்கள், மெட்ரோ நிகழ்வில், ‘பிரமாதமானவரிடம்’ விசில் தலைவர் எப்படி எல்லாம் பவ்யம் காட்டினார் என்பதையும் மேற்கோள்காட்டி இருக்கிறார்களாம்.

கதர் பார்ட்டி சீனியர்களின் புதிய முயற்சி | உள்குத்து உளவாளி
வீரமானவரின் வில்லத்தனமும் வியூகமும் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in