‘விசில்’ கட்சியின் சேனலும் பத்திரிகையும் | உள்குத்து உளவாளி

‘விசில்’ கட்சியின் சேனலும் பத்திரிகையும் | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

மீடியா என்றாலே ஆரம்பம் முதலே அலர்ஜியாக இருக்கிறது விசில் தலைவருக்கு. அதனால் தங்களுக்கென பிரத்யேக டிவி சேனல் ஒன்றையும் கட்சிப் பத்திரிகை ஒன்றையும் தொடங்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது விசில் பார்ட்டி. சேனலைப் பொறுத்தவரை ‘ஆடிட்டர்’ மாண்புமிகு பொறுப்பேற்றிருக்கிறாராம். தினம் வரும் பத்திரிகை நடத்தும் செய்திச் சேனலில் பணியாற்றிய ‘கிங்’கானவரை சேனலுக்கு ஆசிரியராக வேலைக்கு எடுத்து பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கிவிட்டார்களாம்.

அநேகமாக, சேனலுக்கு ‘விசில்’ என்றே பெயர் இருக்கலாம் என்கிறார்கள். சேனலுக்கான நிதி ஆதாரங்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சில மாதங்களுக்கு முன்னதாக விசில் கட்சியில் ஐக்கியமான சூரியக் கட்சியைச் சேர்ந்த ‘மதிமயக்கி’ கம்பெனி அதிபரின் ‘மகிழ்ச்சியான’ மகனார் ஏற்றிருக்கிறாராம்.

இதேபோல் முரசொலி, சங்கொலி ரேஞ்சில் கட்சி செய்திகளை மட்டுமே தாங்கிவரும் 10 பக்கங்கள் கொண்ட நாளிதழ் ஒன்றையும் தொடங்குகிறதாம் விசில் பார்ட்டி. இதற்கு ‘வீர வாகை’ என்ற பெயரை தேர்வு செய்திருப்பவர்கள், பத்திரிகை துறையில் அனுபவம் வாய்ந்த, கட்சி மாறினாலும் சிவப்புக் கலரை மறக்காத ‘இந்திரன்’ தோழரிடம் ஆசிரியர் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்களாம்.

‘விசில்’ கட்சியின் சேனலும் பத்திரிகையும் | உள்குத்து உளவாளி
‘பூட்டு’ ஜில்லா பொறுப்பு மாண்புமிகு நிலை | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in