‘பூட்டு’ ஜில்லா பொறுப்பு மாண்புமிகு நிலை | உள்குத்து உளவாளி

‘பூட்டு’ ஜில்லா பொறுப்பு மாண்புமிகு நிலை | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

‘பூட்டு’ ஜில்லாவில் உள்ள 7 தொகுதிகளில் பெரும்பகுதியை சூரியனும் இலையும் பந்திவைத்துக் கொண்டுவிட்ட நிலையில், ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என 'ஃபோர்ட்’ தொகுதியில் மட்டும் அந்த ‘அரிவாள் சாமி’ விசில் வேட்பாளராக வெற்றிபெற்றார்.

இந்த நிலையில், இந்த மாவட்டத்துக்கு பொறுப்பு மாண்புமிகுவாக யானை முகக் கடவுளின் பெயர் கொண்டவரை நியமித்தது கட்சித் தலைமை. யானை முகத்தனும் ஆரம்பத்தில் ஆர்வக் கோளாறில் அடிக்கடி ‘பூட்டு’ ஜில்லாவுக்கு வந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அமர்க்களப்படுத்தினார்.

ஆனால், அண்மைக்காலமாக யானை முகத்தனுக்கு துறைசார்ந்த வேறு ‘பல வேலைகள்’ மூச்சுமுட்டுவதால் ‘பூட்டு’ ஜில்லா பக்கம் அவ்வளவாய் பார்க்க முடிவதில்லையாம்.

அண்மையில், தாய்மாமன் சீர் கொடுப்பதற்காக அந்தப் பக்கம் வந்து போனதோடு சரியாம். பொறுப்பு மாண்புமிகு இப்படி பொறுப்பாக(!) இருப்பதால் ஒரே ஒரு எம்எல்ஏ-வும் எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் சூரியக் கட்சி முன்னாள் மூத்த மாண்புமிகுவோடு சேர்ந்து கொண்டு வந்தவரைக்கும் ‘பார்க்க’ ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அதேபோல், அதிகாரக் கட்சியில் தங்களைக் கொண்டு நோக்க ஆட்கள் யாரும் இல்லை என்பதால் சூரியக் கட்சி, இலைக்கட்சி தலைகளுடன் பழைய பந்தத்தை அப்படியே பிடித்துக் கொண்டு அதிகாரிகள் பலரும் அவரவர் இஷ்டத்துக்கு அள்ளித் தட்டுகிறார்களாம்.

‘பூட்டு’ ஜில்லா பொறுப்பு மாண்புமிகு நிலை | உள்குத்து உளவாளி
தூங்காநகர் ‘பட்டி’ சரகத்தில் ‘நாட்டுயர்வு’ அதிகாரி ஆட்டம் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in