‘அ​வார்​டு’ நகர் ‘வேடிக்கை தெரு’ சலசலப்பு | உள்குத்து உளவாளி

‘அ​வார்​டு’ நகர் ‘வேடிக்கை தெரு’ சலசலப்பு | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘அ​வார்​டு’ நகரில் கடந்த 3 ஆண்​டு​களாக ‘வேடிக்கை தெரு’ என்ற பெயரில் இளைஞர்​கள் பங்​கேற்​கும் ஆடல் - பாடல் மற்​றும் கலை நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்த ஆண்​டுக்​கான இந்த திரு​விழா அண்​மை​யில் கூடியது. கடந்த 2 ஆண்​டு​களாக உள்​ளாட்சி நிர்​வாகமே இந்த விழாவை நடத்​தி​யது. ஆனால், இந்த ஆண்டு விழா நடத்​தும் பொறுப்பை மாவட்ட விசில் பார்ட்டி எம்​எல்ஏ ஒரு​வர் ஏற்​றுக் கொண்​டா​ராம்.

இதற்​காக நகரில் உள்ள பட்​டாசு கம்​பெனி உரிமை​யாளர்​கள், பருப்பு மில் ஓனர்​கள் உள்​ளிட்​டோரிடம் கணிச​மான தொகை டொனேஷ​னாகப் பெறப்​பட்​ட​தாம். ஆனால், வசூலான தொகை​யில் நான்​கில் ஒரு பங்கு மட்​டுமே நிகழ்ச்​சிக்​காக செல​விடப்​பட்​ட​தாம். எஞ்​சிய தொகையை யார் கணக்​கிலோ ‘செல்​வ​மாக’ சேர்த்​து​விட்​டார்​களாம்.

இந்த விஷ​யத்​தைக் கேள்​விப்​பட்​டு, நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றவர்​களும் டொனேஷன் கொடுத்​தவர்​களும், “இதுக்கு அவங்க எல்​லாம் எவ்​வளவோ தேவலாம் போலிருக்​கே” என்று புலம்​பித் தள்ளி வரு​கிறார்​களாம்​.

‘அ​வார்​டு’ நகர் ‘வேடிக்கை தெரு’ சலசலப்பு | உள்குத்து உளவாளி
தூங்கா நகர் மாவட்ட விசில் பிள்ளைகளின் வருத்தம் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in