தூங்கா நகர் மாவட்ட விசில் பிள்ளைகளின் வருத்தம் | உள்குத்து உளவாளி

தூங்கா நகர் மாவட்ட விசில் பிள்ளைகளின் வருத்தம் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

எட்டுத் தொகுதிகளில் வென்றிருந்தும் காலங் காலமாய் மன்றத்தில் இருந்தவர்களுக்கு மாண்புமிகு மகுடம் வாய்க்கவில்லையே என்ற ஆதங்கத்தில் தூங்கா நகர் மாவட்டத்து விசில் பிள்ளைகள் தொடக்கம் முதலே விம்மிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒதுக்கிய ஒரு கோட்டாவையும் பல கட்சி மாறி வந்த குமாரமானவருக்கு கொடுத்ததில் எக்ஸ்ட்ரா அப்செட். இதனால் விசில் எம்எல்ஏ-க்களும் குமாரமானவரும் தாமரை இலை தண்ணீரைப் போலவே இருக்கிறார்கள். குமாரமானவரின் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதையும் அவர்களில் சிலர் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், குமாரமானவருக்கும் கூட்டணிக் கட்சி மாண்புமிகுவுக்கும் குடைச்சல் என விசில் பிள்ளைகள் தரப்பிலிருந்தே கொளுத்தி விடுகிறார்கள். அண்மையில் ’நகைச்சுவை நடுவர்’ இறப்புக்கு அஞ்சலி செலுத்த குமாரமானவரும் கூட்டணி அமைச்சரும் மயானக்கரைக்கு வந்திருந்தார்கள்.

கூட்டணி அமைச்சரும் வந்திருப்பதை அதிகாரிகள் குமாரமானவருக்கு அறிவுறுத்தினார்களாம். அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாதது போல் காரில் உட்கார்ந்திருந்தாராம். கடைசிவரை இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலேயே சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்துவிட்டு அஞ்சலி செலுத்தப் போகும்போது மட்டும் சம்பிரதாயத்துக்காக கைகூப்பிவிட்டு நகர்ந்தார்களாம்.

தூங்கா நகர் மாவட்ட விசில் பிள்ளைகளின் வருத்தம் | உள்குத்து உளவாளி
மலைக்கோட்டை மாநகர இலைக் கட்சி நிலை | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in