அவார்டு நகர் மாவட்ட மாண்புமிகுக்​கள் ‘பஞ்சாயத்து’ | உள்குத்து உளவாளி

அவார்டு நகர் மாவட்ட மாண்புமிகுக்​கள் ‘பஞ்சாயத்து’ | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

“​நாங்க ரெண்டு பேரும் இணைபிரியா சகோ​தரி​களாகி விட்​டோம்” என்று அவார்டு நகர் மாவட்ட மாண்​புமிகுக்​கள் இரு​வரும் வாய்ப்​பேச்​சுக்கு சொன்​னாலும் உள்​ளாற உஷ்ணம் குறை​யாமல்​தான் இருக்​கிறார்​கள். இவர்​களுக்கு இடை​யில் பஞ்​சா​யத்து வராமல் இருப்​ப​தற்​காகவே சம்​பந்​தப்​பட்ட தொகு​தி​களுக்கு இவர்​களையே மாவட்​டச் செய​லா​ளர்​களாக்​கியது பனையூர் தலை​மை.

இவர்​களுக்​காகவே, 7 தொகு​தி​கள் கொண்ட இந்த மாவட்​டம் இப்​போது 5 மாவட்​ட​மாக பிரிக்​கப்​பட்டுள்​ளது. இவர்​களைப் போலவே தன்​னை​யும் தனது தொகு​திக்கு மாவட்​டச் செய​லா​ள​ராக்க வேண்​டும் என மெனக்​கிடு​கிறா​ராம் பால்​கோவா தொகு​தி​யின் கந்​தனுக்கு மறு​பெயரைக் கொண்ட விசில் எம்​எல்ஏ.

இந்​தப் பிளானுடன் அண்​மை​யில் கட்சி நிர்​வாகி​களை அழைத்​துக் கூட்​டம் போட்​ட​வர், அனை​வருக்​கும் கை மணக்க வாய் மணக்க மதிய விருந்தை போட்​டு​விட்டு அத்​தனை பேரிட​மும் எது​வுமே சொல்​லாமல் மினிட் புத்​தகத்​தில் கையெழுத்து வாங்​கி​னா​ராம். அதை வைத்​துக் கொண்​டு, தன்னை மாவட்​டச் செய​லா​ள​ராக்க வேண்​டும் என்று தனது தொகுதி சார்ந்த நிர்​வாகி​கள் தீர்​மானமே நிறைவேற்றி இருப்​ப​தாக எழுதி தலை​மைக்கு தெரியப்​படுத்தி விட்​டா​ராம். இதனைத் தொடர்ந்​து, “நமக்​குத்​தான் மாவட்​டச் செய​லா​ளர் பதவி வர்ற மா​திரி இருக்​கு” என்று இப்​போது ஊருக்​குள் பிரச்​சா​ரம்​ செய்​து வரு​கிறா​ராம்​.​

அவார்டு நகர் மாவட்ட மாண்புமிகுக்​கள் ‘பஞ்சாயத்து’ | உள்குத்து உளவாளி
கடல் மாவட்ட சூரியக் கட்​சி சலசலப்பு | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in