இளை​ய​வர் ஒரு​வரை முன்னிலைப்படுத்த இலைக் கட்சி திட்டம் | உள்குத்து உளவாளி

இளை​ய​வர் ஒரு​வரை முன்னிலைப்படுத்த இலைக் கட்சி திட்டம் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

இன்​ன​மும், போனவர்​கள் போகட்​டும் இருப்​பவர்​கள் இருக்​கட்​டும் என்ற மனநிலை மாறாமல் இருக்​கிறா​ராம் இலைக் கட்​சி​யின் எடக்கானவர். அதேசம​யம், அடுத்த தேர்​தலில் ஜென்ஸீ தலை​முறை​யினர் தான் அதி​கள​வில் வாக்​களிக்​கப் போகிறார்​கள். அதனால் நாம் இன்​னும் இப்​படியே இருந்​தால் காலம் தள்ள முடியாது என்ற கணிப்பை இலைக் கட்சித் தலை​வர்​கள் அவருக்கு எடுத்​துச் சொல்லி வரு​கிறார்​களாம்.

அதனால், கட்​சி​யின் முக​மாக இளை​ய​வர் ஒரு​வரை முன்னிலைப்படுத்த வேண்​டும் என்று வலி​யுறுத்தி வரும் அவர்​கள், கொங்​குச் சீமை​யைச் சேர்ந்த சகோதர ஹீரோ நடிகர்​களில் யாராவது ஒரு​வரை கட்​சிக்​குள் கொண்​டுவர உறவு முறை வழி​யாக அப்​ரோச் செய்​து​பார்க்​க​வும் வலி​யுறுத்​துகிறார்​களாம்​.

இளை​ய​வர் ஒரு​வரை முன்னிலைப்படுத்த இலைக் கட்சி திட்டம் | உள்குத்து உளவாளி
இன்​னொரு நியமன சர்ச்சையில் விசில் பார்ட்டி | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in