இன்​னொரு நியமன சர்ச்சையில் விசில் பார்ட்டி | உள்குத்து உளவாளி

இன்​னொரு நியமன சர்ச்சையில் விசில் பார்ட்டி | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

கழகத்​தின் பெயரில் தமிழை வைத்​துக் கொண்டு வேற்று மாநிலத்தவர்​களுக்கு சாதக​மாக செயல்​படு​வ​தாக ஏற்​கெனவே விசில் பார்ட்​டிக்கு எதி​ராக பலரும் பொறு​மிக்​கொண்​டிருக்​கிறார்​கள்.

இந்த நிலை​யில், இன்​னொரு நியமன விவ​கார​மும் இப்​போது வில்லங்​கப் பேச்​சாகி இருக்​கிறது. அரசுத் துறை​களின் வளர்ச்​சிக்கு வழி​காட்​டு​தல் வழங்​க​வும், மாண்​புமிகு மக்​களுக்கு ஆக்கபூர்வமான ஆலோ​சனை​களை வழங்​க​வும் சிறப்​புப் பணி அதி​காரி​கள் (ஓஎஸ்​டி) நியமிக்​கப்​படு​வது வழக்​க​மான ஒன்​று​தான்.

பெரும்​பாலும் இந்த பொறுப்​பு​களில் துறை​சார்ந்த வல்​லுநர்​கள், நிபுணர்​கள், ஓய்​வு​பெற்ற அதி​காரி​கள்​தான் நியமனம் செய்​யப்​படு​வார்​கள். ஆனால், விசில் நிர்​வாகத்​தில், இத்​தகைய நியமனங்​கள் அதி​காரி​கள் மத்​தி​யில் தொடர் சர்ச்​சைகளை ஏற்​படுத்தி வரு​கின்​றன.

ஏற்​கெனவே முதன்​மை​யானவருக்கு ஆலோ​சனை​கள் வழங்க கிரானைட் அதிபர் ஒரு​வரை நியமித்​திருக்​கிறார்​கள். அவருக்​கும், அவரது ஆந்​திரா மச்​சானுக்​கும் உறவின​ரான இன்​னொரு தெலுங்கு தேசத்​துக்​காரரை ‘வளங்​கள்’ துறை மாண்பு​மிகு​வுக்கு ‘வள​மான’ ஆலோ​சனை​கள் வழங்​கும் ராஜகுரு​வாக நியமனம் செய்ய வேலைகள்​ நடக்​கிற​தாம்​.

இன்​னொரு நியமன சர்ச்சையில் விசில் பார்ட்டி | உள்குத்து உளவாளி
சூரியக் கட்​சி ‘மறு சீரமைப்பு’ அப்டேட் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in