‘மகிழ்ச்சி’ மாண்புமிகுவின் உளவு உத்தி | உள்குத்து உளவாளி

‘மகிழ்ச்சி’ மாண்புமிகுவின் உளவு உத்தி | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

தற்போது துப்பறியும் துறையின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நேர்மைக்குப் பெயரெடுத்த அந்த அதிகாரி வடக்கு மண்டலத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தபோது தனது அதிரடி ஆக் ஷன்களால் காக்கி மக்களையே கதறவிட்டுக் கொண்டிருந்தார்.

அந்த விதத்தில் ‘நம்பர் டூ’ பார்ட்டிகளிடம் கல்லாக்கட்டிய பலாப்பழ ஊர் காக்கி அதிகாரி ஒருவர் அப்போதைய ஆட்சி மேலிடம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்திலேயே கையை நீட்டினார். அதுதொடர்பாக விசாரணை நடத்திய நேர்மை அதிகாரி, “சஸ்பெண்ட் செய்யட்டுமா விருப்ப ஓய்வில் போயிடுறியா” எனக் கேட்டாராம்.

இந்த வேலையே வேண்டாம் என்று சொல்லி விருப்ப ஓய்வில் போனவர் அப்படியே போய் விசில் பார்ட்டியில் ஐக்கியமானார். இப்போது ‘மகிழ்ச்சி’ மாண்புமிகுவுக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கும் ‘காக்கி அதிகாரி’ பரமசிவன் கழுத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு, தனக்கு விஆர்எஸ் கொடுத்த அதிகாரியானவர் யாரைப் பற்றி எல்லாம் என்னென்ன நோட் அனுப்புகிறார் என எட்டி எட்டி உளவு பார்க்கிறாராம். அவரது காக்கி மூளையை கச்சிதமாகப் பயன்படுத்தி ‘மகிழ்ச்சி’ மாண்புமிகுவும் சக மாண்புமிகுக்களை உளவு பார்க்க இவரை தந்திரமாகப் பயன்படுத்தி வருகிறாராம்.

‘மகிழ்ச்சி’ மாண்புமிகுவின் உளவு உத்தி | உள்குத்து உளவாளி
முதன்மையானவரிடம் சீறும் கட்சி தலைவர் வைத்த கோரிக்கை | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in