முதன்மையானவரிடம் சீறும் கட்சி தலைவர் வைத்த கோரிக்கை | உள்குத்து உளவாளி

முதன்மையானவரிடம் சீறும் கட்சி தலைவர் வைத்த கோரிக்கை | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

அண்மையில் ‘பேட்டை’யில் எழுச்சி மாநாடு கூட்டிய சீறும் கட்சி தலைவர் அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பார்த்து ரொம்பவே மிரண்டு போனாராம். கட்டுக்கடங்காத அந்தக் கூட்டத்தால் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாதே என உள்ளுக்குள் பதறிய அவர் தனது பேச்சைக்கூட சுருக்கமாக முடித்துக் கொண்டு அங்கிருந்து டெம்போவைக் கிளப்பினார்.

மறுநாளே முதன்மையானவரைச் சந்தித்து மாநாட்டு தீர்மானங்கள் தொடர்பாக பேசிய தலைவர் கூடவே, தனக்கு பிரத்யேக பாதுகாப்பு வழங்குவது குறித்தும் கோடிட்டுக் காட்டினாராம்.

இந்த நிலையில், ‘குறிச்சி’ மாவட்ட சீறும் கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் சிலர் அந்த மாவட்ட எஸ்பி-யை சந்தித்து, “மாநாட்டில் விரும்பத் தகாத நபர்கள் சிலர் ஊடுருவியதாக சந்தேகிக்கிறோம். இதனால் வருங்காலங்களில் எங்கள் தலைவருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் வருமோ என அஞ்சுகிறோம்.

எனவே, அவருக்கு பிரத்யேகப் போலீஸ் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துவிட்டு வந்தார்களாம். இதற்கு நடுவே, மாநாட்டில் சீறும் கட்சி தலைவருக்கு சரியானபடிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்ற காரணத்தைக் காட்டி திருப்பதி கடவுளின் பெயர் கொண்ட காவல் அதிகாரி ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

முதன்மையானவரிடம் சீறும் கட்சி தலைவர் வைத்த கோரிக்கை | உள்குத்து உளவாளி
கிறுகிறுக்கும் ‘கிரி’ மாவட்ட விசில் முகாம் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in