விசில் பார்ட்டியில் விஜயமானவரை ‘வளப்​படுத்​தும்’ 2 திட்​டங்​கள் | உள்குத்து உளவாளி

விசில் பார்ட்டியில் விஜயமானவரை ‘வளப்​படுத்​தும்’ 2 திட்​டங்​கள் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘கோட்​டை’ மாவட்ட விசில் கட்​சிக்​குள் புதி​தாக நுழைந்​திருக்​கும் இலைக் கட்​சி​யின் விஜய​மானவருக்கு கட்​சிப் பொறுப்​பு​களை​யும் வழங்கி இருக்​கிறார்​கள். இதை வைத்​துக்கொண்டு தினம் ஒரு கூட்டம் நடத்​திக் கொண்​டிருக்​கிறார் அவர்.

இதற்​கிடையே, விசில் அரசு அறி​வித்​திருக்​கும் இரண்டு முக்​கிய திட்​டங்​கள் விஜய​மானவரை ‘வளப்​படுத்​தும்’ நோக்​கிலேயே அறிவிக்​கப்​பட்​டிருப்​ப​தாக அங்​குள்ள வாக்​காளர்​களே வாயைப் பிளக்​கிறார்​கள்.

இலைக் கட்​சி​யில் செயல்​வடிவம் கொடுக்​கப்​பட்ட அந்த ‘ரிவர்​கள் இணைப்​புத் திட்​டத்​தில்’ ஏற்​கெனவே ஆறேழு கி.மீ. தூரத்​துக்கு கால்​வாய் வெட்​டியது விஜய​மானவருக்கு வேண்​டப்​பட்ட கம்​பெனி​தா​னாம். ஆனால், சூரியன் ஆட்​சி​யில் அந்த திட்​டத்​தைக் கண்​டு​கொள்​ளாமல் விட்​டு​ விட்​டார்​கள்.

இப்​போது விசில் ஆட்​சி​யில் அதே திட்​டத்​துக்கு ரூ.150 கோடி ஒதுக்கி இருக்​கிறார்​கள். இதற்​கான ஒப்​பந்​தங்​கள் மிகச் சரி​யாக விஜய​மானவருக்கே என்று அடித்​துச் சொல்​கிறார்​கள். இதே​போல, கிரானைட் பாலிஷிங் யூனிட் அமைக்​க​வும் நிதி ஒதுக்கி இருக்​கிறார்​கள். இந்த மாவட்​டத்​தில் பூமிக்கு அடி​யில் கிரானைட் பாளங்​கள் இருக்​கும் என்​பதை கணித்து நூற்​றுக்​கணக்​கான ஏக்​கர்​களை சல்​லி​சான ரேட்​டுக்கு முன்​னமே வளைத்​துப் போட்டு வைத்​திருக்​கிறா​ராம் விஜய​மானவர்.

“இங்கே பாலிஷிங் யூனிட் வந்​து​விட்​டால் கிரானைட் குவாரி​களை​யும் தொடங்கி கல்​லாக்​கட்ட ஆரம்​பித்​து​விடு​வார். ஆக மொத்​தத்​தில், அவர் போட்ட ஸ்கெட்ச் படியே அனைத்து வேலைகளும் அமர்க்​கள​மாய் நடக்​கின்​றன” என்​கிறார்​கள்​ ‘கோட்​டை’ப்​புரத்​து மக்​கள்​.

விசில் பார்ட்டியில் விஜயமானவரை ‘வளப்​படுத்​தும்’ 2 திட்​டங்​கள் | உள்குத்து உளவாளி
கொழும்பு டெஸ்ட்: பாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி 2-வது இன்னிங்ஸிலும் தடுமாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in