கொழும்பு டெஸ்ட்: பாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி 2-வது இன்னிங்ஸிலும் தடுமாற்றம்

இந்திய அணி வெற்றிபெற வாய்ப்பு
கொழும்பு டெஸ்ட்: பாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி 2-வது இன்னிங்ஸிலும் தடுமாற்றம்
Updated on
2 min read

கொழும்பு: இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்​டி​யில் பாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 229 ரன்​கள் எடுத்​தது.

கொழும்பு நகரில் உள்ள சிங்​களீஸ் விளை​யாட்டு மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்னிங்​ஸில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 503 ரன்​கள் குவித்து இன்னிங்ஸை டிக்​ளேர் செய்​தது. அதி​கபட்​ச​மாக தேவ்​தத் படிக்கல் 117, துருவ் ஜூரெல் 115, ரிஷப் பந்த் 63 ஷுப்​மன் கில் 50 ரன்​கள் சேர்த்​தனர்.

இதையடுத்து விளை​யாடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 83.4 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 265 ரன்​கள் எடுத்​தது. மழை மற்​றும் போதிய வெளிச்​சம் இல்​லாத காரணத்​தால் ஆட்​டம் முன்​கூட்​டியே நிறுத்​தப்​பட்​டிருந்​தது. சோனல் தினுஷா 85 ரன்​களும், லகிரு குமாரா 8 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

பாலோ-ஆனை தவிர்க்க மேற்​கொண்டு 38 ரன்​கள் சேர்க்க வேண்டும் என்ற நிலை​யில் நேற்று 4-வது நாள் ஆட்​டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளை​யாடியது. லகிரு குமாரா 58 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 12 ரன்​கள் எடுத்த நிலை​யில் சரண்ஷ் ஜெயின் பந்​து​வீச்​சில் துருவ் ஜூரெலிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார்.

அதிரடி​யாக விளை​யாடிய சோனல் தினுஷா தனது 2-வது சதத்தை விளாசிய நிலை​யில் 162 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 103 ரன்​கள் எடுத்த நிலை​யில் சரண்ஷ் ஜெயின் பந்​தில் சிலிப் திசை​யில் நின்ற கே.எல்​.​ராகுலிடம் கேட்ச் கொடுத்து கடைசி விக்​கெட்​டாக ஆட்​ட​மிழந்​தார். முடி​வில் இலங்கை அணி 89.4 ஓவர்​களில் 290 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து பாலோ-ஆன் ஆனது.

பாலோ-ஆனில் இருந்து தப்​பிப்​ப​தற்கு இலங்கை அணிக்கு 13 ரன்கள் தேவை​யாக இருந்​தது. இந்​திய அணி தரப்​பில் பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை​யும், சரண்ஷ் ஜெயின் 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். ரவீந்​திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்டை கைப்​பற்​றினர்.

பாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி 213 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை தொடர்ந்து விளை​யாடியது. தொடக்க வீர​ரான லகிரு உதரா 3 ரன்​கள் எடுத்த நிலை​யில் முகமது சிராஜ் பந்​தில் டீப் பைன் லெக் திசை​யில் சரண்ஷ் ஜெயினிடம் கேட்ச் கொடுத்து வெளி​யேறி​னார்.

மற்​றொரு தொடக்க வீர​ரான கமில் மிஷாரா 39 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 32 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரவீந்​திர ஜடேஜா பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்​கிய கமிந்து மெண்​டிஸ், பசிந்து சூரியபண்​டா​ரா​வுடன் இணைந்து அதிரடி​யாக விளை​யாடி​னார்.

பசிந்து சூரியபண்​டாரா 78 பந்​துகளி​லும், கமிந்து மெண்​டிஸ் 87 பந்​துகளி​லும் அரை சதம் கடந்​தனர். 3-வது விக்​கெட்​டுக்கு 115 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை பிரசித் கிருஷ்ணா பிரித்​தார். பிரசித் கிருஷ்ணா வீசிய ஷார்ட் பாலை கமிந்து மெண்​டிஸ் விளாச முயன்ற போது ஸ்கொயர் லெக் திசை​யில் ஷுப்​மன் கில்​லின் அற்​புத​மாக கேட்ச் செய்​தார்.

கமிந்து மெண்​டிஸ் 92 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​கள் சேர்த்​தார். இதன் பின்​னர் களமிறங்​கிய கேப்​டன் தனஞ்​ஜெயா டி சில்வா 44 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 23 ரன்​கள் சேர்த்த நிலை​யில் மானவ் சுதார் பந்​தில் கல்லி திசை​யில் நின்ற தேவ்​தத் படிக்​கல்​லிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்​டி​னார்.

மட்​டையை சுழற்​றிய பசிந்து சூரியபண்​டாரா 173 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 10 பவுண்​டரி​களு​டன் 92 ரன்​கள் எடுத்த நிலை​யில் மானவ் சுதார் பந்​தில் ரிஷப் பந்த்​தால் ஸ்டெம்​பிங் செய்​யப்​பட்​டார். இதைத் தொடர்ந்து களமிறங்​கிய நிரோஷன் டிக்​வெல்லா 6 ரன்​களில் சரண்ஷ் ஜெயின் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் வெளி​யேறி​னார். இலங்கை அணி 72.4 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 229 ரன்​கள் எடுத்​திருந்த போது மழை குறுக்​கிட்​டது.

இதனால் 4-வது நாள் ஆட்​டம் அத்​துடன் முடித்​துக்​கொள்​ளப்​பட்​டது. சோனல் தினுஷா 37 பந்​துகளில், 7 ரன்​களும், கேஷரா நுவந்தா 29 பந்​துகளில், 3 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். இந்​திய அணி சார்​பில் மானவ் சுதார் 2 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், சரண்ஷ் ஜெயின், ரவீந்​திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

கைவசம் 4 விக்​கெட்​கள் இருக்க இலங்கை அணி 16 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள நிலை​யில் இன்று கடைசி நாள் ஆட்​டம் நடை​பெறுகிறது. இன்​றைய ஆட்​டத்​தில் இலங்கை அணி​யின் எஞ்​சிய விக்​கெட்​களை விரை​வாக கைப்​பற்றி குறைந்த ரன்​கள் கொண்ட இலக்​கை துரத்​தி வெற்​றி காண்​ப​தில்​ இந்​தி​ய அணி கூடு​தல்​ கவனம்​ செலுத்​தக்​கூடும்​.

கொழும்பு டெஸ்ட்: பாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி 2-வது இன்னிங்ஸிலும் தடுமாற்றம்
நேபாள பெருவெள்ளம்: தமிழக அரசு உதவி எண்கள் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in