விசில் பார்ட்டி கிளைகளில் ‘வசூல் ராஜ்ஜி​யம்’ | உள்குத்து உளவாளி

விசில் பார்ட்டி கிளைகளில் ‘வசூல் ராஜ்ஜி​யம்’ | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

லஞ்​சத்தை ஒழிப்​பதே எங்​களின் தாரக மந்​திரம் என்று சொல்கிறார்கள் விசில் பார்ட்டி தலை​வர்​கள். ஆனால், தலைமை தான் அப்​படி இருக்​கிறதே தவிர பல இடங்​களில் ஆளும் ​கட்சி கிளை​கள் அள்​ளித் தட்டி வரு​கிறார்​களாம். முக்​கிய​மாக, அதி​காரி​கள் டிரான்​ஸ்ஃபர் விவ​காரங்​களில் புகுந்து விளை​யாடு​கிறார்​களாம்.

“ஃபோர்ட் தலை​வரின் சொந்த ஊரில் இருக்​கும் சட்​டப்​புள்ளி ஒரு​வர், “எதுவா இருந்​தா​லும் எங்​கிட்ட கொண்​டு​வாங்க. தலை​வர் நம்ம சொன்னா அப்​பீலே சொல்ல மாட்​டாரு” என்று சொல்​லியே ஸ்வீட் பாக்​ஸ்​களை டப்பா டப்​பா​வாய் அள்​ளுகிறா​ராம்.

மூத்த அமைச்​சரின் பேரைச் சொல்​லிக் கொண்டு ஒரு​வர் இப்​படி ‘வசூல் ராஜ்ஜி​யம்’ நடத்​துகிறார் என்​றால் அதுகுறித்து தலை​மைக்கு துப்​புக் கொடுக்க வேண்​டியதே போலீஸ் தான். ஆனால், முக்​கிய​மாக போலீஸ் அதி​காரி​கள் டிரான்​ஸ்ஃபருக்​குத்​தான் சுளை​யாக எண்ணி வாங்​கு​கிறா​ராம் அந்த சட்​டப்​புள்​ளி.

இன்​றைய தேதிக்கு காவல் ஆய்​வாளர் ஒரு​வர் தான் விரும்​பும் இடத்​துக்கு டிரான்​ஸ்ஃபர் பெற ‘15 எல்’ என ‘விலைப் பட்​டியல்’ வைத்​திருக்​கிறா​ராம். இதெல்​லாம் ‘ஃ போர்ட்’ தலை​வருக்கு தெரி​யுமா என்று கேட்​டால், “அவருக்கு தெரி​யாமலா இருக்​கும்?” என்று நமட்​டுச் சிரிப்பு சிரிக்​கிறார்​கள் சட்​டப்​புள்​ளி​யின் சரித்​திரத்​ தொடர்​பு​களை அறிந்​தவர்​கள்​.

விசில் பார்ட்டி கிளைகளில் ‘வசூல் ராஜ்ஜி​யம்’ | உள்குத்து உளவாளி
சூரியக் கட்​சி சிடுசிடு சீனியர் ‘பகுப்பாய்வு’ | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in