சூரியக் கட்​சி சிடுசிடு சீனியர் ‘பகுப்பாய்வு’ | உள்குத்து உளவாளி

சூரியக் கட்​சி சிடுசிடு சீனியர் ‘பகுப்பாய்வு’ | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

சூரியக் கட்​சி​யின் சிடுசிடு சீனியர் தனது தோல்விக்​கான காரணத்தை இன்​னும் தேடிக் கொண்டு இருக்​கிறா​ராம். கடந்த சில தினங்​களுக்கு முன்​பு,தனது தொகு​தி​யில் பூத் வாரி​யாக பதி​வான வாக்​கு​களின் பட்​டியலை எடுத்​து​வைத்​துக் கொண்டு அதன் பொறுப்​பாளர்​களிடம், “பகையை எங்கே வைத்​தோம்?” என கேள்வி எழுப்​பி​னா​ராம்.

அதற்கு அவர்​கள், “எங்​கே​யும் வைக்​க​வில்​லை... நமக்​குள்​ளேயே தான் வைத்​திருந்​திருக்​கிறோம். நாங்​கள் அனை​வருமே சரி​யாக வேலை பார்த்​தோம். ஆனால், அவர் மட்​டும் ‘சரி​யா’ வேலை பாத்​துட்​டார்” என்று மாவட்​டத்​தின் முதன்​மைப் புள்​ளியைக் கையைக் காட்​டி​னார்​களாம்.

ஒன்​றாக இருந்த ஜெயில் மாவட்​டத்தை தனது மகனுக்​காக இரண்​டாகப் பிரித்​தா​ராம் சீனியர். அதிலிருந்தே தனது அதி​காரம் குறைக்​கப்​பட்​டு​விட்​ட​தாக சீனியர் மீது முதன்​மைப் புள்ளி வருத்​தத்​தில் இருந்​தா​ராம். இந்த நிலை​யில், இந்​தத் தேர்​தலில் சீனியரை தோற்​கடிக்க விசில் பார்ட்​டி​யின் ‘மருத்​து​வர்’ வேட்​பாள​ருக்கு ஆ‘னந்​த​மாக’ நிதி​யுதவி செய்​தா​ராம்.

இதையெல்​லாம் கட்​சிக்​காரர்​கள் மென்று விழுங்கி சொன்​னதைக் கேட்டு சுளீர் ஆன சீனியர், “காண்ட்​ராக்​டரா வந்​தவன கட்​சிக்​காரனா மாத்தி கட்​சி​யில சீட்​டும்வாங்​கிக் குடுத்​தேன். அதுக்கு நன்​றிக் கடனா, வளர்த்த கடா இப்ப மார்ல பா​யு​தாக்​கும். இது விஷயமா நான் தம்​பிக்​கிட்ட பேசிக்​கிறேன்​” என்​று சொன்​னா​ராம்​.

சூரியக் கட்​சி சிடுசிடு சீனியர் ‘பகுப்பாய்வு’ | உள்குத்து உளவாளி
‘அன்​பான’ வாரிசுப் பிள்ளை மீது சூரியக் குடும்​பம் வருத்​த​ம் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in