விசில் பார்ட்டியில் இணைய மும்முறை மனு போட்ட ‘தங்கம்’ | உள்குத்து உளவாளி

விசில் பார்ட்டியில் இணைய மும்முறை மனு போட்ட ‘தங்கம்’ | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

சூரியக் கட்சி அரசாங்கத்தில் மாண்புமிகுவாக இருந்த அந்தத் ‘தங்கமான’ மனிதருக்கு தொகுதியில் ‘வாஸ்து’ சரியில்லை என்று சொல்லி மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இலைக் கட்சி தலைகளைப் போல நாமும் விசில் பார்ட்டியில் இணைந்துவிடலாம் என கணக்குப் போட்டாராம் திருமிகு ‘தங்கம்’. ஆனால் உஷாரான விசில் பார்ட்டி மக்கள், “இவரை உள்ளே விடாதீர்கள்” என்று தலைமைக்கு தகவலை தட்டிவிட்டார்களாம். இருப்பினும் ‘குலுக்கல்’ மாப்பிள்ளை மூலமாக மூன்று முறை மனுப் போட்டுவிட்டாராம் ‘தங்கம்’. ஆனாலும் க்ளிக் ஆகவில்லையாம்.

இதையடுத்து, சிறுபான்மையினர் மத்தியில் தனது செல்வாக்கை நிரூபித்துக் காட்டி அதன் பிறகு விசில் பார்ட்டிக்கு அப்ளிகேஷன் போடும் திட்டத்தில் இருக்கிறாராம் ‘தங்கம்’. இதற்காக தனது மாவட்டத்தில் சிறுபான்மை அமைப்புகளை ஒருங்கிணைத்து இதுவரை நான்கு கூட்டங்களைப் போட்டிருக்கிறாராம். அடுத்ததாக ஆகஸ்ட் நான்காவது வாரத்தில் தலைநகரில் மாநாடு ஒன்றை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இருக்கிறாராம்.

இந்த மாநாட்டை, தானே முன்னின்று நடத்தியது போல் காட்டவேண்டும் என்பதற்காக பம்பரமாய் சுற்றிவரும் ‘தங்கம்’, மாநாட்டுக்குப் பிறகு விசில் தலைமை தனது பவரைப் புரிந்து கொண்டு பனையூர் கேட்டை கட்டாயம் திறக்கும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாராம்.

விசில் பார்ட்டியில் இணைய மும்முறை மனு போட்ட ‘தங்கம்’ | உள்குத்து உளவாளி
தேசிய மருத்​துவ ஆணை​யம் மூலம் மருத்​து​வர்​களுக்கு தனி அடை​யாள எண்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in