தேசிய மருத்​துவ ஆணை​யம் மூலம் மருத்​து​வர்​களுக்கு தனி அடை​யாள எண்

புதிய வரைவு விதி​கள் வெளி​யீடு
தேசிய மருத்​துவ ஆணை​யம் மூலம் மருத்​து​வர்​களுக்கு தனி அடை​யாள எண்
Updated on
1 min read

சென்னை: தேசிய மருத்​துவ ஆணை​யம் மூலம் மருத்துவர்களுக்கு தனி அடை​யாள எண் வழங்​கு​வதற்​கான புதிய வரைவு விதி​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

மருத்​து​வர்​கள் பதிவு மற்​றும் மருத்​துவ உரிம திருத்த விதிமுறைகள் 2026 வரைவு விதி​களில் தேசிய மருத்​துவ ஆணையம் மாற்​றங்​கள் செய்து அரசிதழில் வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, மாநில மருத்​துவ கவுன்​சிலில் மருத்​து​வர் பதிவு செய்தவுடன், தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் நெறி​சார் வாரியம் மூல​மாக அவருக்கு தனித்​து​வ​மான அடை​யாள எண் உரு​வாக்​கப்​படும்.

இந்த எண் வழங்​கப்​பட்ட பிறகு, அந்த மருத்​து​வர் நாட்​டின் எந்த மாநிலத்​திலோ அல்​லது யூனியன் பிரதேசத்​திலோ தனி​யாக மீண்டும் பதிவு செய்ய தேவை​யில்​லாமல் இந்​தியா முழு​வதும் மருத்​துவ பயிற்சி மேற்​கொள்ள தகுதி பெறு​வார். மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்​தின் குறி​யீடு, மாநில மருத்​துவ கவுன்​சில் பதிவு எண் ஆகியவை உள்​ளடங்​கி​யிருக்​கும் வகையி​லான தனித்​துவ அடை​யாள எண்​ணாக இது இருக்​கும்.

தனித்​துவ அடை​யாள எண் முறை மூலம் ஒரு மருத்​து​வருக்கு எதி​ராக மேற்​கொள்​ளப்​படும் நடவடிக்​கைகளை மாநில பதிவேட்​டிலும், தேசிய பதிவேட்​டிலும் உடனே அறிந்​து​கொள்ள முடி​யும்.

ஏற்​கெனவே மாநில மருத்​துவ கவுன்​சில்​களில் பதிவு செய்​துள்ள மருத்​து​வர்​கள், தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் இணை​யதளத்​தில் குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் தங்​களது விவரங்​களை புதுப்​பித்து தனித்​துவ அடை​யாள எண்ணை பெற்​றுக்​கொள்ள வேண்​டும்.

இதற்​காக எந்​தவொரு கட்​ட​ண​மும் வசூலிக்​கப்​ப​டாது. இதுதொடர்​பாக பொது​மக்​கள் மற்​றும் மருத்​து​வத்​துறை சார்ந்​தவர்​கள் தங்​களின் கருத்​துகளை​யும், ஆட்​சேபனை​களை​யும் 30 நாட்​களுக்​குள் சமர்ப்​பிக்​கலாம்​ என்​று ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய மருத்​துவ ஆணை​யம் மூலம் மருத்​து​வர்​களுக்கு தனி அடை​யாள எண்
திமுக பாதை​யில் தவெக: அண்ணாமலை குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in