விசில் விசிட்டிங்... இலைக் கட்சியினர் சிலரது நகர்வுகள் | உள்குத்து உளவாளி

விசில் விசிட்டிங்... இலைக் கட்சியினர் சிலரது நகர்வுகள் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

விசில் பார்ட்டி பக்கம் விசிட்டிங் போய் வந்த இலைக் கட்சியின் முன்னாள் மாண்புமிகுக்களில் சிலர் இன்னமும் ஊசலாட்டத்தில் தான் இருக்கிறார்களாம்.

பிரிந்து போனவர்கள் எல்லாம் மீண்டும் எடக்கானவரை சந்திப்பதற்காக நடத்திய ‘பிரிவோம் சந்திப்போம்’ நிகழ்வில் கடைசி ஆளாகத்தான் போய் ஒட்டிக்கொண்டு நின்றாராம் ‘டர்னிங் ஊர்’ மாவட்டத்தைச் சேர்ந்த ‘வீரமான’ முன்னாள் மாண்புமிகு.

அது மாத்திரமல்லாது, தான் கூடுவிட்டு கூடு பாய்ந்ததால் தனக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளருக்கு அனைவரும் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என கட்சியினருக்கு அட்வைஸ் எல்லாம் கொடுத்தவர், “விஜய்யின் வளர்ச்சி யாருமே எதிர்பார்க்காத அசுர வளர்ச்சி. இப்படி வருவார்னு நீங்களும் நானும் எதிர்பார்த்தோமா... மக்கள் ஆதரிக்கிறாங்கன்னா சும்மாவா?” என்று விஜய் புராணமும் பாடினாராம்.

இதையெல்லாம் கட்டம் போட்டு கூட்டிக் கழித்துப் பார்த்து கணக்குச் சொல்லும் அந்த மாவட்டத்தின் இலைப் பார்ட்டிகள், “தலைவரு இங்க தங்கமாட்டாரு போலத் தெரியுது. சீக்கிரமே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செஞ்சுட்டு விசில் பார்ட்டியில கலந்துடுவார்னு தான் நினைக்கிறோம்.

அதுக்கு முன்னோட்டமாத்தான் தன்னுடைய ‘நிழல்’ கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் குமாரமான நகரச் செயலாளரை 300 பேர் சகிதம் விசில் கட்சிக்கு அனுப்பி வெச்சு முன்னோட்டம் காட்டி இருக்கறதா தெரியுது.

விசில் கட்சியில ‘கோட்டையன்’ தலைவருடன் டச்சுல இருக்கிற இவரு, தனக்கு விசில் பார்ட்டியில மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்குமான்னும் கேட்டுட்டு வர்றதா சொல்றாங்க” என்கிறார்கள்.

விசில் விசிட்டிங்... இலைக் கட்சியினர் சிலரது நகர்வுகள் | உள்குத்து உளவாளி
12-ம் வகுப்பு முறைகேட்டை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு: சிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in