‘மலர்’ கட்சியில் மனம் நொந்த ‘தரணி’ அம்மணி | உள்குத்து உளவாளி

‘மலர்’ கட்சியில் மனம் நொந்த ‘தரணி’ அம்மணி | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

“இங்கே பெண்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லீங்கோ” என்று புலம்பிக் கொண்டே கதர் கட்சிக்கு டாட்டா காட்டிவிட்டு ‘மலர்’ கட்சி பக்கம் மடைமாறிய ‘தரணி’ அம்மணி சொந்தத் தொகுதி மக்கள் மீது பெருத்த நம்பிக்கை வைத்து ‘மலர்’ கட்சி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.

ஆனால், கடந்த முறை கதர் கட்சியில் சுமார் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த அம்மணி, இம்முறை 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். தொடர்ந்து மூன்று முறை முதலிடத்தில் வந்த அவரை இம்முறை மூன்றாமிடத்துக்கே தள்ளியது தான் ‘மலர்’ கட்சி சகவாசம் தந்த ‘அங்கீகாரம்’.

இதனால் மனம் வெறுத்துப் போயிருக்கும் அம்மணி, ‘‘நெட்டையோ குட்டையோ... பேசாம கதர் பார்ட்டியிலேயே இருந்திருக்கலாம். அப்படி இருந்துருந்தா இந்நேரம் நம்ம தான் அங்க சீனியர். கூட்டணி ஆட்சியில நம்மளத்தான் மாண்புமிகுவாக்கி இருப்பாங்க. எல்லாம் போச்சு” என்று தனது விசுவாசிகள் வட்டாரத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

“நரியூருக்குப் பயந்து புலியூருக்கு வந்த கதையாப் போச்சு நம்ம பொழப்பு” என முன்பு ‘மலர்’ கட்சி மீது மன வருத்தம் கொண்ட போதே “அக்கா விஜய் கட்சியில சேரப் போறாங்க” என்று செய்தி பரப்பிய அம்மணியின் விசுவாசிகள், இப்போது அந்த பழைய ஸ்லைடை மீண்டும் தூசு தட்டி எடுத்து சமூக வலைதளங்களில் ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘மலர்’ கட்சியில் மனம் நொந்த ‘தரணி’ அம்மணி | உள்குத்து உளவாளி
அதிமுக இரு அணியாகப் பிரிந்த வேதனையில் தற்கொலை: கட்சி நிர்வாகியின் கடைசி ஆசைப்படி இறுதி அஞ்சலியில் பங்கேற்ற இபிஎஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in