எடக்கானவர் தொகுதியில் ‘விசில்’ ஊதப்படாதது எப்படி? | உள்குத்து உளவாளி

எடக்கானவர் தொகுதியில் ‘விசில்’ ஊதப்படாதது எப்படி? | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

எடக்கானவர் தொகுதியில் விசில் பார்ட்டிக்காக வேட்பு மனு தாக்கிய ‘அருணமானவரின்’ மனுவும் மாற்று வேட்பாளராக தாக்கிய அவரது மனைவியின் மனுவும் சொல்லி வைத்தாற்போல் தள்ளுபடி ஆனது தெரிந்த கதை தான். ஆனால், வேட்பு மனுக்களை தெரிந்தே ‘கோட்டை விடச்’ சொல்லி ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததே இலைக் கட்சி தரப்பு தானாம்.

கடந்த முறை எடக்கானவர் சுமார் 93 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வாகை சூடினார். ஆனால், இம்முறை விசில் பார்ட்டி களத்தில் இருந்தால் வாக்கு வித்தியாசம் வெகுவாகக் குறையும். வெற்றிக்கே கூட வேட்டு வைக்கலாம் என வியூகப் புலிகள் கணக்குப் போட்டுக் கொடுத்தார்களாம்.

இதையடுத்தே, முன்னாள் இலைக் கட்சி புள்ளியான ‘அருணமானவரை’ ஸ்கெட்ச் போட்டு விசில் பார்ட்டிக்குள் நுழைத்தார்களாம். இதற்கான பொறுப்பு மாங்கனி மாவட்டத்தின் திருப்பதி கடவுளின் பெயர் கொண்ட முன்னாள் இலைக் கட்சி எம் எல்ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

இதையடுத்து, ‘அருணமானவருக்கு’ விசில் கட்சியில் சீட்டை கன்ஃபார்ம் செய்வதற்காக அந்தக் கட்சியின் குஷியான ‘மகிழ்ச்சி’ புள்ளிக்கு 2 ’சி’யை இன்வென்ஸ்ட் செய்ததாம் இலைப் பார்ட்டி. எல்லாம் ‘கணக்காக’ நடந்ததால் ‘அருணமானவருக்கு’ சீட்டை உறுதி செய்திருக்கிறது விசில் பார்ட்டி.

திட்டமிட்டபடி அவரது வேட்பு மனு தள்ளுபடி ஆனதும் அடுத்தகட்ட தவணையாக 3 ‘சி’ யை நாணயத்துடன் எண்ணிக் கொடுத்தார்களாம். அதை எண்ணாமல் வாங்கிக் கொண்டு கணவனும் மனைவியும் கண்காணா தேசத்துக்குப் பறந்து விட்டார்களாம். இருந்தாலும், “என்றைக்கு இருந்தாலும் எங்கள் கையில் சிக்கினால் அந்தாளுக்கு சங்கு தான்” என்று விசில் பார்ட்டிகள் வீறு கொண்டு நிற்கிறார்கள்.

எடக்கானவர் தொகுதியில் ‘விசில்’ ஊதப்படாதது எப்படி? | உள்குத்து உளவாளி
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in