‘முட்டை’ மாவட்ட இலைக் கட்சி ஷாக் | உள்குத்து உளவாளி

‘முட்டை’ மாவட்ட இலைக் கட்சி ஷாக் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘முட்டை’ மாவட்ட தலைநகரில் இலைக் கட்சி வேட்பாளராக பாஸ்கரமான நகரத்தின் முதன்மைப் புள்ளியை தேர்வு செய்து வைத்திருந்தாராம் எடக்கானவர். ஆனால், பாஸ்கரமானவருக்கும் அந்த மாவட்டத்தின் ‘கோல்டு’ மணியான முன்னாள் மாண்புமிகுவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே சரிப்பட்டு வரவில்லை. இருந்தாலும் எடக்கானவர் நமக்கே தொகுதியைக் கொடுப்பார் என மலைபோல் நம்பி வாக்கெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டார் பாஸ்கரமானவர்.

ஆனால், பட்டியல் ரெடியான சமயத்தில், “நீங்கள் அவருக்கு சீட் கொடுப்பதாக இருந்தால் என்னுடைய ‘பாளையம்’ தொகுதிக்கும் ஒரு வேட்பாளரை ரெடி பண்ணிருங்க” என்று மிரட்டும் தொனியில் செக் வைத்தாராம் மிஸ்டர் ‘கோல்டு’.

இதனால் வேறு வழியில்லாமல் அவர் சிபாரிசு செய்த ‘மோகனப்’ பிரமுகருக்கே சீட்டை தந்துவிட்டாராம் எடக்கானவர். இதையடுத்து, வேட்பாளரை மாற்றச் சொல்லி ‘பாஸ்கரமானவரின்’ விசுவாசிகள் போராட்டத்தில் குதித்தார்கள். ஆனாலும் அவரை ‘பேசவேண்டிய’ விதமாகப் பேசி சாந்தப்படுத்தி விட்டார்களாம்.

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் ‘பாஸ்கரமானவரின்’ அக்காள் மகனை விசில் கட்சி அங்கே வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது. இதனால், ‘பாஸ்கரமானவர்’ தனது ஆதரவாளர்களை எல்லாம் சத்தமில்லாமல் மாப்பிள்ளை பக்கமாய் திருப்பிவிட்டு மிஸ்டர் ‘கோல்டு’க்கு பாடம் புகட்டப் போகிறார் என்று ஷாக்கிங் நியூஸ் போடுகிறார்கள் இலை பார்ட்டிகள்.

‘முட்டை’ மாவட்ட இலைக் கட்சி ஷாக் | உள்குத்து உளவாளி
விருதுநகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in