கதர் கட்சியும் வெவரமான ‘வெல்த்’ புள்ளியும் | உள்குத்து உளவாளி

கதர் கட்சியும் வெவரமான ‘வெல்த்’ புள்ளியும் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

முரசுத் தலைவி போட்டியிடும் ‘விருத்தத்’ தொகுதியின் சிட்டிங் கதர் கட்சி ‘ராதை’ எம்எல்ஏ, தனக்கே இம்முறையும் சீட்டை கன்ஃபார்ம் பண்ணிவிடும்படி ‘வெல்த்’ புள்ளியிடம் 10 லகரத்தை அட்வான்ஸ் பேமென்ட் போட்டிருந்தாராம்.

ஆனால், தொகுதி சிக்கவில்லை. “என்னாச்சுண்ணே?” என்று கேட்டதற்கு, “அந்தம்மா ‘விருத்தத்’ தொகுதியை விடமாட்டேனுட்டாங்க. அவங்க கேட்ட ‘ரிஷி’ தொகுதியை சூரியக் கட்சி தரமாட்டேனுட்டாங்க... நான் என்ன செய்ய?” என்று கைவிரித்துவிட்டாராம் ‘வெல்த்’ புள்ளி.

இதேபோல் ஏற்கெனவே, 2021 தேர்தல் சமயத்தில் கதர் பார்ட்டியின் ‘அழகான’ தலைவர் வங்கிக் கடன் நெருக்கடியை சமாளிக்க ‘ராதை’ புள்ளியிடம் 2 கோடி ரூபாய் கடனாகப் பெற்றாராம். 2021-ல் தனக்கு சீட் கன்ஃபார்ம் ஆன சந்தோசத்தில் அந்தக் கடனை திருப்பிக் கேட்காமலே விட்டுவிட்டாராம் ஃபைனான்ஸ் தொழிலில் செழிக்கும் ‘ராதை.’

ஆனால், இப்போது சீட்டையும் பறிகொடுத்து 10 லட்சத்தையும் தலைவருக்கு ‘மொய்’ எழுதி இருக்கிறார். இதனிடையே, இப்போது ‘விருத்தத்’ தொகுதிக்குப் பதிலாக ‘கடல்’ தொகுதியில் களமிறங்கி இருக்கும் ‘சந்திரமான’ கதர் பார்ட்டியிடம் ஒரு ‘சி’ ‘அன்பளிப்பு’ வாங்கிக் கொண்டு தான் சீட்டை ஓகே பண்ணிக் கொடுத்தாராம் வெவரமான ‘வெல்த்’ புள்ளி.

கதர் கட்சியும் வெவரமான ‘வெல்த்’ புள்ளியும் | உள்குத்து உளவாளி
கதர் பார்ட்டி மகளிரணி தலைவியின் ப்ளான் | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in