

தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாத வருத்தத்தில் கதர் பார்ட்டியின் மகளிரணி தலைவி தனது பதவியை துறந்திருக்கிறார். இவர் மட்டுமல்லாது இன்னும் சிலரும் மாநிலத் தலைமை மீது தாங்கமுடியாத ஆத்திரத்தில் இருக்கிறார்களாம். இவர்களில் சிலர், எந்தத் தொகுதி யாருக்கு எவ்வளவு ரேட்டுக்கு விற்கப்பட்டது என்ற ரேஞ்சில் குற்றப்பத்திரிகை தயாரித்து வைத்திருக்கிறார்களாம்.
கூடிய விரைவில் இவர்கள் அனைவரும் கூட்டம் போட்டுப் பேசவிருக்கிறார்களாம். இந்தக் கூட்டத்தில், பிச்சை எடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டம் என நூதனப் போராட்டம் ஒன்றை அறிவிக்கவும் இவர்கள் ஆயத்தமாகி வருகிறார்களாம். கட்சியின் இளம் தலைவர் தமிழகத்துக்குப் பிரச்சாரத்துக்கு வரும்போது அவரைச் சந்தித்துப் பேசவும் இந்த அதிருப்தி அணி ஆயத்தமாகி வருகிறதாம்.