‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி

‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘கதர் பார்ட்டியின் சிட்டிங் ‘காசி’ தொகுதி இம்முறை கைநழுவிப் போயிருக்கிறது. அந்தத் தொகுதியின் ‘அண்ணாச்சி’ எம்எல்ஏ, சூரியக் கட்சியினர் வைத்த சூனியங்களை எல்லாம் சமாளித்து தொகுதிக்குள் தனது சொந்த செலவிலேயே சில பல நல்ல காரியங்களை செய்து கொடுத்திருக்கிறாராம்.

ஆனால் அப்படி இருந்தும், சூரியக் கட்சி தலைமை நிர்வாகியின் மகனுக்காக கதர் பார்ட்டியிடம் இருந்து தொகுதியை ’கபக்’ செய்துவிட்டார்களாம். இதனால் தனது கஷ்டத்தை வெளியில் சொல்லி புலம்ப முடியாத நிலையில் இருக்கிறாராம் ‘அண்ணாச்சி’ எம்எல்ஏ.

இதனிடையே துக்க நிகழ்வு ஒன்றுக்காக அண்மையில் ‘காசி’ தொகுதிக்கு வந்திருந்த கதர் கட்சியின் ‘மாணிக்கமான’ புள்ளி, ‘அண்ணாச்சி’ எம்எல்ஏ-வை சந்தித்துப் பேசினாராம். அப்போது தனது சாதனைகளை எல்லாம் அவரிடம் பட்டியல் போட்டாராம் ‘அண்ணாச்சி’. “இவ்வளவு வொர்க் பண்ணி வெச்சிருக்கீங்க... உங்களுக்கே சீட் இல்லாமப் பண்ணிட்டாங்க.

இந்த மாதிரி நிறைய புகுந்து விளையாடிருக்காங்க. இந்த முறை நம்ம கட்சி எதிர்பார்த்த மாதிரி ஜெயிக்கப் போறதில்ல. ரிசல்ட் வந்த பின்னாடி தலைமையில இருந்து கூப்பிட்டு கருத்துக் கேட்பாங்க. அப்ப நான் உங்கள டெல்லிக்கு அழைச்சுட்டுப் போறேன். அங்க வந்து, இவங்க பண்ணுன கூத்தை எல்லாம் கட்டாயம் சொல்லுங்க” என்று தன் பங்குக்கு ‘ஏத்திவிட்டுப்’ போனாராம்.

‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி
தூங்கா நகரின் ‘சோழமான’ தொகுதியில் தாராளம் காட்டும் ‘கீர்த்தி’ | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in