மெரினாவில் அலையால் இழுத்து செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணியை காப்பாற்றிய போலீஸார்

மெரினாவில் அலையால் இழுத்து செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணியை காப்பாற்றிய போலீஸார்
Updated on
1 min read

சென்னை: மெரினா கடற்​கரை​யில் அலை​யால் கடலுக்​குள் இழுத்து செல்​லப்​பட்ட வெளி​நாட்டு சுற்​றுலாப் பயணியை, கடலோர காவல் படை​யின் மெரினா உயிர்​காக்​கும் குழு​வினர் காப்​பாற்​றினர்.

சென்னை மெரினா கடற்​கரை கண்​ணகி சிலை பின்​புறம் நேற்றுமுன்​தினம் கடலில் குளித்​துக் கொண்​டிருந்த வெளி​நாட்டு இளம்​பெண் ஒரு​வர் திடீரென கடல் அலை​யால் இழுக்​கப்​பட்டு சுமார் 100 மீட்​டர் தூரம் வரை கடலுக்​குள் சென்று தத்​தளித்​துள்​ளார்.

அவரது அலறல் சத்​தம் கேட்டு பொது​மக்​கள், அங்​கிருந்த பாது​காப்​புப் பணி காவலர்​களுக்கு தகவல் அளித்​துள்​ளனர். உடனடி​யாக, மெரினா உயிர் காக்​கும் குழு​வினருக்கு தகவல் அளித்து காவலர் முத்து சரவணன் மற்​றும் மீனவர்​களான பவினேஷ், விக்​னேஷ் ஆகியோர் கடலுக்​குள் குதித்து பத்​திர​மாக இளம் பெண்ணை மீட்டு கரைக்கு அழைத்து வந்​தனர்.

பின்​னர், மருத்​து​வக் குழு​வினர் வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.போலீ​ஸார் அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், அவர் உக்​ரைன் நாட்​டைச் சேர்ந்த இளம் பெண் அனுஷ்கா என்​பது தெரிய​ வந்​தது.

சில தினங்​களுக்கு முன்​பாக, தனது குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பர்​களோடு சென்​னைக்கு சுற்​றுலா வந்​ததும், சென்​னை​யில் உள்ள பிரபல நட்​சத்​திர விடு​தி​யில் தங்கி வரு​வதும் தெரிய​வந்​தது. பின்​னர், அனுஷ்​காவை பத்​திர​மாக அவரது குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பர்​களோடு போலீ​ஸார் அனுப்பி வைத்​தனர்.

மெரினாவில் அலையால் இழுத்து செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணியை காப்பாற்றிய போலீஸார்
கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்த கூடாது: நயினார் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in