கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்த கூடாது: நயினார் வலியுறுத்தல்

கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்த கூடாது: நயினார் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியல் ஆதாயங்களுக்காக கோயில் நிலங்களை பயன்படுத்தப்படக் கூடாது என்பதே தமிழக பாஜகவின் நோக்கம்.

கரூர் மாவட்டத்தில் உள்ள ரூ.25,000 கோடி மதிப்புள்ள 3,085 ஏக்கர் கோயில் நிலங்கள் விஷயத்தில் அரசு அரசியல் லாபத்துக்காகபோதியஆய்வுகளும் வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் செயல்படுகிறது.

குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களில் வசிக்கும் 10,000 குடும்பங்களை வெளியேற்றுங்கள் என்றோ, அவர்களை அகதிகளாக்குங்கள் என்றோ பாஜக எங்கேயும் கூறவில்லை.

இனாம் சொத்துகளில் முறையான பட்டா பெற்றவை மட்டுமே தற்போது நீக்கப்பட்டுள்ளன என்று தவெக அரசு சொல்கிறது.

அதை ஏற்றுக் கொண்டாலும் இந்த சொத்துகளை பத்திரப்பதிவுத் துறையும், இந்து அறநிலையத் துறையும், இதே மாவட்ட நிர்வாகமும் தடை செய்து வைத்திருந்தது ஏன்? இந்த காரணத்தை விளக்காமல் அரசு செயல்படும் விதம் சந்தேகத்துக் குரியதாகவும் வேறேதோ அரசியல் நோக்கமிருப்பதாகவும் தோன்றுகிறது. குறிப்பாக மாவட்ட ஆட்சியரின்

பரிந்துரை, இணை ஆணையரின் குறிப்பு, ஆணையரின் இறுதி உத்தரவு, முதல்வரின் கரூர் வருகை, தவெக நிர்வாகி எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பேச்சு என அனைத்தும் ஒரே நாளில் நடந்தது எப்படி, ஏன் இந்த அவசரம் என தெரிவித்துள்ளார்.

கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்த கூடாது: நயினார் வலியுறுத்தல்
நீட் வினாத்தாள் கசிவது இளைஞர்களின் உயிரோடு விளையாடும் கொலைக் களம்: மாணிக்கம் தாகூர் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in