

மதுரை: மதுரை உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-க்கு அச்சுறுத்தல் காரணமாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி தொகுதி தவெக எம்எல்ஏ-வாக இருப்பவர் ம.விஜய். பொது இடங்களுக்கு மக்களை சந்திக்க செல்லும்போது, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என சில தினத்திற்கு முன்பு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதனிடம் அவர் மனு ஒன்றை கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து விஜயின் எம்எல்ஏ பாதுகாப்புக்கென துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் எம்எல்ஏவின் பாதுகாப்பு பணியை உசிலம்பட்டியில் தொடங்கினர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் முதன் முறையாக விஜய் எம்எல்ஏ பேசியபோது, அவருக்கு ஓரிரு அரசியல் கட்சி தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும் அவருக்கு இந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.