

சென்னை: மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு 2 உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பொதுத் துறை செயலர் இ.சுந்தரவல்லி வெளியிட்ட அரசாணை விவரம்: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஏ.சுகந்தி ஆகியோரை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் நியமித்துள்ளார்.
இவர்களது பதவிக் காலம் 3 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை. இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை இப்பதவியில் இருப்பார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.