புதுவையில் தனித்து சென்ற பாமக பாஜக கூட்டணிக்கு திடீர் ஆதரவு

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

Updated on
1 min read

புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் புது​வை​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ், பாஜக, அதி​முக, பாமக கட்​சிகள் இடம் பெற்​றிருந்​தன. ஆனால் பாமக​வுக்கு ஒரு சீட் கூட ஒதுக்​க​வில்​லை. அதிருப்​தி​யடைந்த புதுவை பாமக​வினர், கட்சி மேலிடத்​தில் பேசி, 19 தொகு​தி​களில் மனு தாக்​கல் செய்​ததோடு வாக்கு சேகரிப்​பிலும் ஈடு​பட்டு வரு​கின்​றனர். தற்​போது திடீர் திருப்​பம் ஏற்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பாமக தலை​வர் அன்​புமணி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், "புதுவை சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு ஆதர​வளிக்க பாமக முடிவு செய்​துள்​ளது. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்​டணி வேட்​பாளர்​களை வெற்றி பெற செய்ய பணி​யாற்​றும்​படி புதுவை நிர்​வாகி​களைக் கேட்​டுக் கொள்​கிறேன்" என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

அன்​புமணி​யின் அறி​விப்​பைத் தொடர்ந்து புதுவை பாமக​வினரும், சொந்த கட்சி வேட்​பாளர்​களுக்​கான பிரச்​சா​ரத்தை கைவிட்டு விட்​டு, தேசிய ஜனநாயகக் கூட்​டணி கட்​சி​யினரின் வேட்​பாளர்​களுக்​காக வாக்கு சேகரிக்​கும் பணி​யில் ஈடு​பட்​டு வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>அன்புமணி ராமதாஸ்</p></div>
“பாஜக ஆட்சிக்கு வந்தால் கறி, கோழி, மீன் கிடைக்காது” - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in