“பாஜக ஆட்சிக்கு வந்தால் கறி, கோழி, மீன் கிடைக்காது” - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தின் ராய்ப்பூர் கிராமத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பிரச்சாரத்துக்கு சென்றார். அப்போது பெண்கள் அவருக்கு கும்ப மரியாதை செலுத்தினர். படம்: பிடிஐ

மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தின் ராய்ப்பூர் கிராமத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பிரச்சாரத்துக்கு சென்றார். அப்போது பெண்கள் அவருக்கு கும்ப மரியாதை செலுத்தினர். படம்: பிடிஐ

Updated on
1 min read

புருலியா: ​மேற்​கு​வங்​கத்​தில் அடுத்த மாதம் 23, 29-ம் தேதி​களில் இரண்டு கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெறுகிறது. இந்நிலையில், புருலியா தொகு​தி​யில் நேற்று தடாலடி பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார் முதல்​வர் மம்தா பானர்​ஜி. அப்​போது அவர் கூறிய​தாவது: பாஜக ஆட்​சிக்கு வந்​தால் இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்​கும். மக்​கள் சாப்​பிட கறி, கோழி, மீன் எது​வும் கடை​யில் கிடைக்​காது.

அவர்​களுக்கு மக்​களின் மதம், கலாச்​சா​ரத்​தின் மீது நம்​பிக்கை கிடை​யாது. அவர்​கள் வன்​முறை​யில் ஈடு​படு​வர், ஆதி​வாசி மக்​களை மோசம் செய்​வர். பாஜக ஆளும் மாநிலங்​களில் பெண்​கள் தாக்​கப்​படு​கின்​றனர். பாஜக மூத்த தலை​வர் ஒரு​வர் (அமித் ஷா) நமக்கு எதி​ராக ‘குற்​றப்​பத்​திரி​கை’ வெளி​யிட்​டுள்​ளார். குஜ​ராத்​தில் பல வன்​முறை​களில் ஈடு​பட்ட அவர்​களுக்கு எதி​ராகத்​தான் குற்​றப்​பத்​திரிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்.

திரிண​மூல் கட்​சி​யின் லக்​ஷ்மிர் பந்​தர் திட்​டத்​தால் பெண்​கள் பயனடைந்​துள்​னர். வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மூலம் 1.2 கோடி வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. நமது ஆதர​வாளர்​களைக் குறி​வைத்து இந்த நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

என்​னுடன் பணி​யாற்​றிய அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​களை​யும் தேர்​தல் ஆணை​யம் மாற்றி அவமானப்​படுத்​தி​யுள்​ளது. இவ்​வாறு மம்​தா ​பானர்​ஜி கூறி​னார்​.

<div class="paragraphs"><p>மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தின் ராய்ப்பூர் கிராமத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பிரச்சாரத்துக்கு சென்றார். அப்போது பெண்கள் அவருக்கு கும்ப மரியாதை செலுத்தினர். படம்: பிடிஐ</p></div>
பெண்கள் தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம்: அசாமில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கார்கே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in