

ஓமலூர் தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ-வான தமிழரசு, தனது ஆதரவாளர்களுடன் அதிமுக-வில் இணைந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் 2006-ம் ஆண்டு பாமக எம்எல்ஏ-வாக இருந்த தமிழரசு அக்கட்சியிலிருந்து இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். இந்நிலையில், அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் தமிழரசு கூறியதாவது: பாமக மற்றும் வன்னியர் சங்கத்தில் 40 ஆண்டு காலம் பயணித்தேன்.
2014-ல் பாமக-வில் இருந்து வெளியேறினேன். 2019-ல் அழைப்பின் பேரில் ஆதரவாளர்களுடன் திமுக-வில் இணைந்தேன். அப்போது, எங்களை ஆதரிப்பதாகவும் பாதுகாப்பதாகவும் சொன்னார் ஸ்டாலின். ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் எங்களுக்கு திமுக-வில் குறைந்தபட்ச மரியாதை கூட இல்லை. மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் பிரிவினையை ஏற்படுத்துகிறார். எனவே, மனமுவந்து, அதிமுக-வில் இணைந்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.