‘மக்கள் சாப்பாடு’ திட்டம் முதல் பெண்ணின் திருமண வயது 21 வரை: பாமக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

‘மக்கள் சாப்பாடு’ திட்டம் முதல் பெண்ணின் திருமண வயது 21 வரை: பாமக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
1 min read

சென்னை: பூரண மதுவிலக்கு, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை, ரூ.10-க்கு சாப்பாடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பாமக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

• பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

• பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படும்.

• கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.

• சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

• தமிழ்நாட்டில் 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

• அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

• வேலைவாய்ப்பு இல்லாதா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும்.

• கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும்.

• பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

• ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு 2கிலோ நாட்டு சர்க்கரை வழங்கப்படும்.

• தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும்.

• தமிழ்நாட்டின் 2வது தலைநகரமாக திருச்சியை மாற்றுவோம்.

• குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.

• ஞாயிற்றுக்கிழமையில் ரூ.25-க்கு அசைவ சாப்பாடு வழங்கப்படும்.

• ரூ.10-க்கு ‘மக்கள் சாப்பாட்டு’ திட்டம் தொடங்கப்படும்.

• நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும், உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பாமக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

‘மக்கள் சாப்பாடு’ திட்டம் முதல் பெண்ணின் திருமண வயது 21 வரை: பாமக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்
என்டிஏ ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும் தயங்காது: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in