

பாமக தலைவர் அன்புமணி
அதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக நேற்று 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக தலைவர் அன்புமணி அறிவித்தார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு சேலம் (மேற்கு), தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் (தனி), கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் (வடக்கு), அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாமக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக தலைவர் அன்புமணி நேற்று அறிவித்தார். அதன்படி, கீழ்வேளூர் - ச.வடிவேல் ராவணன் (பாமக பொதுச் செயலாளர்), அம்பத்தூர் - என்.சேகர் (மாநில துணைத் தலைவர் - முன்னாள் நகர் மன்றத் தலைவர்), செஞ்சி - அ.கணேஷ் குமார் (இளைஞரணி தலைவர் - முன்னாள் எம்எல்ஏ) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்.