ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்

கிளாம்பாக்கத்தில் அதிகாரிகள் ஆலோசனை
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்
Updated on: 
1 min read

சென்னை: ஆ​யுத​ பூஜை மற்​றும் தீபாவளி பண்​டிகைக்​காக கிளாம்​பாக்​கத்​தில் இருந்து சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​வது குறித்து அதி​காரி​கள் ஆலோ​சனை நடத்​தினர்.

இந்​தாண்​டுக்​கான ஆயுத பூஜை மற்​றும் தீபாவளி பண்​டிகை விடுமுறையை முன்​னிட்டு பொது​மக்​கள் தங்​களது சொந்த ஊர்களுக்கு எவ்​வித இடையூறுமின்​றி, பாது​காப்​பாகப் பயணம் செய்​வதை உறு​தி​செய்​யும் வகை​யில் போக்​கு​வரத்து கழகங்​கள் சார்​பில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன. இதுகுறித்த விரி​வான ஆய்​வுக் கூட்​டம் கிளாம்​பாக்​கத்​தில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு பேருந்து முனை​யத்​தில் நேற்று நடை​பெற்​றது.

சிஎம்டிஏ உறுப்​பினர் செயலர் ராகுல்நாத் மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் வீரப்​பன் ஆகியோர் தலை​மை​யில் இக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பண்​டிகை காலத்​தையொட்டி கூடு​தலாக இயக்​கப்பட உள்ள சிறப்​புப் பேருந்​துகள் மற்​றும் ஆம்னி பேருந்துகளின் இயக்​கம் குறித்து துறை சார்ந்த அதி​காரி​களு​டன் விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது. பேருந்து நிலை​யங்​களுக்கு வரும் பயணி​களுக்​குத் தேவை​யான குடிநீர், கழி​வறை மற்​றும் நிழற்குடை உள்​ளிட்ட அனைத்து அடிப்​படை வசதி​களை​யும் தடையின்றி வழங்க அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

முன்​னெச்சரிக்கை நடவடிக்​கை: மேலும், பண்​டிகை நாட்​களில் கிளாம்​பாக்​கம் மற்​றும் அதனைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் போக்கு​வரத்து நெரிசல் ஏற்​படு​வதைத் தவிர்க்க எடுக்​கப்பட வேண்​டிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்து இக்கூட்டத்​தின் வாயி​லாக விவா​திக்​கப்​பட்​டது. விடு​முறை நாட்களில் கூட்ட நெரிசலைக் கட்​டுப்​படுத்த தற்​காலிக பேருந்து நிலை​யங்​கள் அமைப்​பது மற்​றும் கூடு​தலாக இயக்​கப்​படும் பேருந்​துகளை நிறுத்​து​வதற்​கான பொருத்​த​மான இடங்​களைத் தேர்வு செய்​வது குறித்​தும் இந்தக் கூட்டத்தில் முக்​கிய ஆலோசனை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

இதில் தாம்​பரம் காவல் துணை ஆணை​யர் (போக்​கு​வரத்​து) பிரபாகர், கிளாம்​பாக்​கம் பேருந்து முனைய முதன்மை நிர்​வாக அதி​காரி மால​தி, தமிழ்​நாடு விரைவு போக்​கு​வரத்​துக்​ கழக மேலாண்மை இயக்​குநர் குணசேகரன், மாநகர போக்​கு​வரத்​துக்​கழக இணை மேலாண்மை இயக்​குநர் சுந்​தர​பாண்​டியன் உள்ளிட்ட பல்​வேறு துறை சார்ந்த உயர் அலு​வலர்​கள் கலந்துகொண்டனர்.

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்
தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கல்: ஜோலார்பேட்டை அருகே ரயிலை கவிழ்க்க சதி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in