நாட்டின் 4 திசைகளிலும் 108 அடி உயரத்தில் ஹனுமன் சிலை அமைக்கும் திட்டம்: ராமேசுவரத்தில் இறுதிக்கட்டத்தை நெருங்கியது

ராமேசுவரத்தில் ஹனுமன் சிலை அமைக்கும்  பணி நடந்து வருகிறது. (அடுத்த  படம்) அங்கு அமைய உள்ள ஹனுமன் சிலையின் மாதிரி வடிவம்.

ராமேசுவரத்தில் ஹனுமன் சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. (அடுத்த படம்) அங்கு அமைய உள்ள ஹனுமன் சிலையின் மாதிரி வடிவம்.

Updated on
1 min read

ராமேசுவரம்: ​நாட்​டின் 4 திசைகளி​லும் ஹனுமன் சிலை அமைக்​கும் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, ராமேசுவரத்​தில் 108 அடி உயர சிலை அமைக்​கும் பணி​கள் இறு​திக் கட்​டத்தை நெருங்கி வரு​கின்​றன.

நாட்​டின் 4 திசைகளில் 108 அடி உயர ஹனு​மன் சிலை அமைக்​கும் திட்​டம், 2008-ம் ஆண்டு ஹெச்சி நந்தா அறக்​கட்​டளை அறங்​காவலரும், அனு​மன் பக்​தரு​மான நிகில் நந்தா (49) என்​பவ​ரால் தொடங்​கப்​பட்​டது. இமாச்சல பிரதேச மாநிலத்​தில் உள்ள சிம்லா நகரின் புறநகர் பகு​தி​யான ஜக்கு மலை​யில்​தான் முதல்

சிலை அமைக்​கும் பணி 2008-ல் தொடங்​கப்​பட்​டது. இப்​பணி முடிந்து 2010-ல் சிலை திறக்​கப்​பட்​டது. குஜ​ராத்​தின் மோர்பி என்ற இடத்​தில் உள்ள பரமபூஜ்ய பாபு கேஷ்​வானந்த் ஆசிரமத்​தில் 2-வது சிலை அமைக்​கும் பணி கடந்த 2018-ல் தொடங்​கியது.

இந்த 108 அடி உயர ஹனு​மன் சிலையை 2022-ல் காணொலி மூலம் பிரதமர் நரேந்​திர மோடி திறந்து வைத்​தார். அப்​போது பிரதமர் மோடி பேசும்போது, “வலிமை, தைரி​யம், கட்​டுப்​பாடு ஆகிய​வற்​றின் உரு​வ​மாக ஹனு​மன் திகழ்​கிறார்.

நாட்​டின் நான்கு திசைகளி​லும், ஹனு​மன் சிலை அமைக்​கும் திட்​டத்​தில் 3-வது சிலை அமைக்​கும் பணி ராமேசுவரத்​தில் தொடங்​கப்பட உள்​ளது. 4-வது சிலை மேற்கு வங்​கத்​தில் அமைக்​கப்​படும்” என்றார்.

ராமாயண முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால், ராமேசுவரத்தில் ஹெச்சி நந்தா அறக்​கட்​டளை சிலை அமைத்து வரு​கிறது.

2022 பிப்​ர​வரி​யில் ராமேசுவரம் ஓலைக்​குடா கடற்​கரை அருகே ரூ.83 கோடி மதிப்​பில் அடிக்​கல் நாட்டு விழா நடை​பெற்​றது.

தற்​போது பணி​கள் தீவிர​மாக நடந்து வரு​கின்​றன. ஹனு​மன் இலங்​கையைப் பார்ப்​பது​போல சிலை அமைக்​கப்​பட்டு வரு​கிறது.

வரும் பிப்​ர​வரிக்​குள் சிலையை அமைக்​கும் பணியை முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. திறப்பு விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி கலந்து கொள்ள வாய்ப்​பு உள்​ள​தாக அந்த அறக்​கட்​டளை நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர்.

<div class="paragraphs"><p>ராமேசுவரத்தில் ஹனுமன் சிலை அமைக்கும்  பணி நடந்து வருகிறது. (அடுத்த  படம்) அங்கு அமைய உள்ள ஹனுமன் சிலையின் மாதிரி வடிவம். </p></div>
70 வயதை கடந்தவர்களுக்கும் திமுகவில் பதவி வழங்கப்படும்: ஆர்.எஸ்.பாரதி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in