70 வயதை கடந்தவர்களுக்கும் திமுகவில் பதவி வழங்கப்படும்: ஆர்.எஸ்.பாரதி தகவல்

70 வயதை கடந்தவர்களுக்கும் திமுகவில் பதவி வழங்கப்படும்: ஆர்.எஸ்.பாரதி தகவல்
Updated on
1 min read

சென்னை: “​தி​முக​வில் 70 வயதை கடந்த மூத்த நிர்​வாகி​களுக்கு வயது மற்​றும் அனுபவத்துக்கு ஏற்ப தகுந்த பொறுப்​பு​கள் மற்​றும் பதவி​கள் வழங்​கப்​படும். யாரையும் கட்சி ஒதுக்கவிடாது” என்று அக்​கட்​சி​யின் அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ். பாரதி தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து செய்​தியாளர்​களிடம் அவர் கூறியதாவது: திமுக உட்​கட்​சித் தேர்தல் தொடர்​பான தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

இதற்​கான தேதி​களை கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தனது வசதிக்​கேற்ப விரை​வில் முறைப்​படி அறி​விப்​பார்.

முழு ஒப்புதலுடன் தீர்மானம் இக்​கூட்​டத்துக்கு அழைக்​கப்​பட்​டிருந்த மூத்த முன்​னோடிகள் மற்​றும் பலமுறை ஒன்​றிய செய​லா​ளர்​களாகப் பணி​யாற்​றிய நிர்​வாகி​கள் அனை​வரிட​மும் கலந்​தாலோ​சிக்​கப்​பட்​டது.

அவர்​களின் முழு மனப்​பூர்​வ​மான ஒப்​புதல், வரவேற்​புடன் இத்​தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. கட்​சி​யினர் அனை​வரும் அடிமட்ட அளவில் இருந்து தேர்​தல் பணி​களை மேற்​கொள்​வதோடு, தங்​களைச் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்​டும் என்​றும் கட்​சித் தலை​வர் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

அனுபவத்துக்கு ஏற்ப பதவி எல்​லோரை​யும் ஒருங்​கிணைத்​துச் செல்​லும் தலை​வ​ராக மு.க.ஸ்​டா​லின் திகழ்​கிறார். கட்சி அமைப்​பில் 70 வயதைக் கடந்த மூத்த நிர்​வாகிகள் யாரை​யும் கட்சி ஒதுக்​கி​வி​டாது.

அவர்​களது வயது, அனுபவத்துக்கு ஏற்​ப தகுந்த பொறுப்​பு​கள் மற்​றும் பதவி​கள் வழங்​கப்​படும். இளைஞர்​களுக்​குக் கட்​சி​யில் அதி​க அள​வில் வாய்ப்பு அளிப்​ப​தோடு, வரவிருக்​கும் இடைத்​தேர்​தல்​கள் மற்​றும் உள்​ளாட்​சித் தேர்​தல்​கள் உள்​ளிட்ட அனைத்து ஆக்​கப்

​பூர்​வ​மான பணி​களை​யும் விரைவுபடுத்தி எதிர்​கொள்​வதற்​காகவே இந்த வி​திமுறை திருத்​தங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர்​ தெரிவித்தார்​.

70 வயதை கடந்தவர்களுக்கும் திமுகவில் பதவி வழங்கப்படும்: ஆர்.எஸ்.பாரதி தகவல்
மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in