தமிழகத்தில் 44 தனித் தொகுதிகளில் கிறிஸ்தவராக மதம் மாறியவர்கள் போட்டியிட தடை விதிக்கக் கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

தமிழகத்தில் 44 தனித் தொகுதிகளில் கிறிஸ்தவராக மதம் மாறியவர்கள் போட்டியிட தடை விதிக்கக் கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் உள்ள 44 தனித் தொகு​தி​களில் கிறிஸ்​தவர்​களாக மதம் மாறிய​வர்​கள் போட்​டி​யிட தடை விதிக்​கக் கோரி இந்து மக்​கள் கட்சி சார்​பில் தொடரப்​பட்ட வழக்கு இன்று விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​படும் என சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரி​வித்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இந்த நிலை​யில், தனித் தொகு​தி​கள் தொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் இந்து மக்​கள் கட்​சித் தலை​வர் அர்​ஜுன் சம்​பத் ஒரு மனு தாக்​கல் செய்​தார். அதில் அவர் கூறி​யிருந்​த​தாவது: தமிழகத்​தில் உள்ள 234 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் 44 தொகு​தி​கள் தனித் தொகு​தி​களாக அறிவிக்​கப்​பட்​டு, பழங்​குடி​யின, பட்​டியலின மக்​களுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​து, சீக்​கிய, புத்த மதங்​களைப் பின்​பற்​று​பவர்​கள் மட்​டுமே பழங்​குடி​யினர், பட்​டியல் இனத்​தவர் என அரசி​யலமைப்​புச் சட்​டத்​தில் வரையறுக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், மேற்​கண்ட 44 தனித் தொகு​தி​களில் கிறிஸ்​தவர்​களாக மதம் மாறிய பட்​டியலினத்​தவர்​தான் 90 சதவீதம் போட்​டி​யிடு​கின்​றனர்.

எனவே, அதற்கு தடை விதிக்க வேண்​டும். தனித் தொகு​தி​களில் இந்​து, சீக்​கிய, புத்த மதத்​தினரை மட்​டுமே போட்​டி​யிட அனு​ம​திக்க வேண்​டும். கிறிஸ்​தவ​ராக மதம் மாறிய​வர்​கள் போட்​டி​யிட அனு​ம​திக்​கக் கூடாது.

அவசர வழக்கு

முக்​கிய​மாக, வேட்​புமனு பரிசீலனை​யின்​போது அரசி​யல் சாசனம் மற்​றும் உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​பு​களின் அடிப்​படை​யில் இந்த விவ​காரத்தை தீவிர​மாக ஆய்வு செய்​ய​வும், இது தொடர்​பாக தேர்​தல் அதி​காரி​களுக்கு சுற்​றறிக்கை பிறப்​பிக்​க​வும் தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அதில் கோரி​யுள்​ளார்.

தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள் முரு​கன் அமர்​வில் மனு​தா​ரர் தரப்பு வழக்​கறிஞர் எஸ்​.​ கார்த்​திகை பாலன் நேற்று ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்​காக விசா​ரிக்​கக் கோரி முறை​யீடு செய்​தார். இதை பரிசீலித்த நீதிப​தி​கள், இந்த வழக்கு 7-ம் தேதி (இன்​று) விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​படும் என்று தெரி​வித்​துள்​ளனர்.

தமிழகத்தில் 44 தனித் தொகுதிகளில் கிறிஸ்தவராக மதம் மாறியவர்கள் போட்டியிட தடை விதிக்கக் கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
துரைமுருகன் குடும்பத்துக்கு ரூ.262 கோடி சொத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in