துரைமுருகன் குடும்பத்துக்கு ரூ.262 கோடி சொத்து

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம்கூட வாங்கவில்லை
துரைமுருகன் குடும்பத்துக்கு ரூ.262 கோடி சொத்து
Updated on
1 min read

வேலூர்: அமைச்​சர் துரைமுருகன் குடும்​பத்​துக்கு ரூ.261கோடியே 90,29,497 சொத்​து​கள் உள்ளது. காட்​பாடி தொகு​தி​யில் துரை​முரு​கன் நேற்று மனுத்​தாக்​கல் செய்​தார். அவருக்​கு, மாற்று வேட்​பாள​ராக மரு​மகள் சங்​கீதா மனுத்​தாக்​கல் செய்​துள்​ளார்.

இவர்களின் சொத்து விவரம் மனு​வில் குறிப்​பிட்​டுள்ளனர். அதில், துரை​முரு​கன் வசம் 500 கிராம் தங்க நகைகள், 1 காரட் வைரம், 2 கிலோ வெள்ளி பொருட்​களும், அவரது மனைவி சாந்​தகு​மாரி வசம் 2,224 கிராம் தங்க நகைகள், 5.5 காரட் வைரம், 6 கிலோ வெள்ளி பொருட்​களும் உள்​ளன.

இந்த நகை உள்​ளிட்ட பொருட்​கள் 2021 தேர்​தலில் குறிப்​பிட்ட அளவே உள்​ளன. இரு​வரும் கடந்த 5 ஆண்​டு​களில் ஒரு கிராம் தங்க நகை கூடவாங்​க​வில்​லை. மரு​மகள் சங்​கீதா வசம் 3,664 கிராம் தங்க நகைகள், 3 காரட் வைரம், 31.70 கிலோ வெள்ளி உள்​ளன.

அமைச்​சர் துரை​முரு​கன் மீது 2 லஞ்ச ஒழிப்பு வழக்கு உட்பட மொத்​தம் 9 வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. சங்​கீதா வசம் 3 கார்​களும், மகன் கதிர்​ஆனந்த் வசம் 5 கார்​களும், ஒரு இரு சக்கர வாக​ன​மும் உள்​ளன. துரை​முரு​கன் கைவசம் ரூ.26 லட்​சத்து 34,151 பணமும், சாந்​தகு​மாரியிடம் ரூ.25 லட்​சத்து 57,939 தொகை​யும் உள்​ளன.

துரை​முரு​க​னின் அசை​யும் சொத்து மதிப்பு ரூ.4 கோடியே 1 லட்​சத்து 56,054-ம் சாந்​தகு​மாரிக்கு ரூ.14 கோடியே 16 லட்​சத்து 25,722-ம் அசையா சொத்​துக்​களின் மதிப்​பாக துரை​முரு​கன் வசம் ரூ.11 கோடியே 44 லட்​சத்து 86,954-ம் சாந்​தகு​மாரி வசம் ரூ.62 கோடியே 41 லட்​சத்து 69,697-ம் உள்​ளது. துரை​முரு​க​னுக்கு கடனாக ரூ.11 லட்​சத்து 25 ஆயிர​மும், சாந்​தகு​மாரிக்கு ரூ.15 கோடியே 20 லட்​சத்து 18,441 உள்​ளது.

ஆக மொத்​தம் இரு​வரிட​மும் அசை​யும், அசையா சொத்து மதிப்பு ரூ.73 கோடியே 86 லட்​சத்து 56,651 உள்​ளது. அதே​போல், துரை​முரு​கன் மகன் கதிர்​ஆனந்த், மருமகள் சங்​கீ​தா, கதிர்​ஆனந்​த் மூத்தமகள் செந்​தாமரை ஆகியோரின் அசையும் அசையா சொத்துகளையும் சேர்த்து மொத்தமாக துரை​முரு​கன் குடும்​பத்​தினர் வசம் ரூ.261 கோடியே 90 லட்​சத்து 29,497 உள்​ளது.

துரைமுருகன் குடும்பத்துக்கு ரூ.262 கோடி சொத்து
கரூரை சேர்ந்த 18 பேர் சுயேச்சையாக போட்டி: கோவை தெற்கு தொகுதி நிலவரம் குறித்து அண்ணாமலை சந்தேகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in