2-ம் நிலை காவலர், எஸ்ஐ தேர்வுக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் தளர்த்தக் கோரி மனு

2-ம் நிலை காவலர், எஸ்ஐ தேர்வுக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் தளர்த்தக் கோரி மனு
Updated on: 
1 min read

சென்னை: ​காவல் துறை​யில் 2-ம் நிலை காவலர் மற்​றும் உதவி ஆய்வாளர் தேர்​வுக்​கான வயது வரம்பை 5 ஆண்​டு​கள் தளர்த்​து​மாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு அனைத்து நிலை போட்​டித் தேர்​வாளர்​கள் சங்​கத்​தின் தலை​வர் ஏ.கலீல் பாஷா, செய​லா​ளர் ஜி.​வி.​திருக்​குமரன் ஆகியோர் உள்​துறைச் செயலர் அலு​வல​கத்​தில் நேற்று அளித்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக காவல்​துறை​யில் 2-ம் நிலை காவலர் மற்​றும் உதவி ஆய்வாளர் தேர்​வுக்கு லட்​சக்கணக்​கான இளைஞர்​கள் குறிப்​பாக கிராமப்​புறங்​களைச் சேர்ந்​தவர்​கள் தயா​ராகி வரு​கின்​றனர்.

தற்​போது 2-ம் நிலை காவலர் பதவிக்கு வயது வரம்பு 26 ஆகவும், உதவி ஆய்வாளர் தேர்​வுக்கு 30 ஆகவும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இடஒதுக்​கீட்டுப் பிரி​வினருக்கு மட்​டும் 2 ஆண்​டு​கள் வயது வரம்பு தளர்த்​தப்​படு​கிறது.

கடந்த 2021 முதல் 2026 வரையி​லான கால​கட்​டத்​தில் தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தின் தேர்​வு​கள் ஆண்​டு​தோறும் நடத்​தப்​பட​வில்​லை. இதனால், காவல்​துறை​யில் சேரும் லட்​சி​யத்​தில் உள்ள லட்​சக்​கணக்​கான இளைஞர்​கள் வயது வரம்​பைக் கடந்து பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

காவல் துறை​யில் சேர அதி​கபட்ச வயது வரம்பு கேரளத்​தில் 31 ஆகவும், தெலங்​கா​னா, கர்​நாட​கா​வில் 32 ஆகவும், குஜ​ராத்​தில் 35 ஆகவும், மத்​தி​யப் பிரதேசத்​தில் 33 ஆகவும் உள்​ளது.

தமிழகத்​தில் கடந்த 5 ஆண்​டு​களில் ஆண்​டு​தோறும் சீருடைப் ​பணி​யாளர் தேர்​வு​கள் நடத்​தப்​ப​டாத​தால் 2-ம் நிலை காவலர், உதவி ஆய்வாளர் தேர்​வுக்​கான வயது வரம்பை அனைத்து பிரி​வினருக்​கும் 5 ஆண்​டு​கள் தளர்த்த வேண்​டும். இவ்​வாறு அந்த மனு​வில்​ கூறப்​பட்​டுள்​ளது.

2-ம் நிலை காவலர், எஸ்ஐ தேர்வுக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் தளர்த்தக் கோரி மனு
வீரமணி வழக்கு: மேலும் 2 பெண் அதிகாரிகளிடம் புலனாய்வுக் குழு விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in