வீரமணி வழக்கு: மேலும் 2 பெண் அதிகாரிகளிடம் புலனாய்வுக் குழு விசாரணை

வீரமணி வழக்கு: மேலும் 2 பெண் அதிகாரிகளிடம் புலனாய்வுக் குழு விசாரணை
Updated on: 
1 min read

சென்னை: ஜெம் வீரமணி வழக்கு விவ​காரத்​தில் மேலும், 2 பெண் அதி​காரி​களிடம் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு விசா​ரணை நடத்தி உள்​ளது.

சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் தொழிலதிபர் வீரமணி, ​உதவி​யாளர் சாந்​தி, கணவர் மகேந்​திர சிம்​மன், முன்​னாள் உதவி​யாளர் கணேசன் மற்​றும் கார் ஓட்​டுநர்​கள் கைது செய்​யப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

கடந்த 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக சிறுமிகளைக் குறி வைத்து வீரமணி பாலியல் வன்​கொடுமை செய்​தது அம்​பல​மானது.

சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு கூடு​தல் காவல் ஆணை​யர் தேன்​மொழி தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட சிறப்​புப் புல​னாய்​வுக் குழு நடத்​திய விசா​ரணை​யில், இது​வரை 10 சிறுமிகள் பாதிக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது.

இதுதொடர்​பாக வீரமணி மீது 7 போக்சோ வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில் 3 வழக்​கு​களில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

இதற்​கிடையே, வீரமணி​யின் பாலியல் அத்​து​மீறல்​களை ரகசி​ய​மாக படம் பிடித்த சாந்​தி, அதை வைத்து அவரை மிரட்டி பணம் பறித்​த​தாக​வும், இதன் பின்​புலத்​தில் பணம் பறிக்​கும் கும்​பல் செயல்​பட்​ட​தாக​வும் குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இதுகுறித்​தும் விசா​ரணை நடக்கிறது. மேலும், ஜெம் வீரமணி வழக்​கைக் கையாள்​வ​தில் ஏற்​பட்ட தாமதம், புகார் மீது நடவடிக்கை எடுக்​காதது உள்​ளிட்​டவை குறித்து முன்​னாள் சென்னை காவல் ஆணை​யர் அருண், முன்​னாள் கூடு​தல் ஆணை​யர் கண்​ணன் ஆகியோரிடம் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு​வினர் 3 மணி நேரம் விசா​ரித்​தனர்.

இதே​போல், புகார் அளிக்​கப்​பட்ட காலத்​தில் சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு காவல் கூடு​தல் ஆணை​ய​ராக இருந்த ராதி​கா, பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றத் தடுப்​புப் பிரிவு துணை ஆணை​ய​ராக இருந்த வனி​தா​விட​மும் விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

புகார் காலத்​தில் ராதிகா நீண்ட விடுப்​பில் இருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. சிறப்​புப் புல​னாய்​வுக் குழு தனது அடுத்​தகட்ட வி​சா​ரணை அறிக்​கையை வரும் 27-ம் தேதி நீதி​மன்​றத்​தில்​ தாக்​கல்​ செய்​யவுள்​ளது.

வீரமணி வழக்கு: மேலும் 2 பெண் அதிகாரிகளிடம் புலனாய்வுக் குழு விசாரணை
சைபர் மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க முதியோருக்கு போலீஸார் விழிப்புணர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in