தமிழக கோயில்களின் உபரி நிதியை அரசின் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை கோரி வழக்கு

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
தமிழக கோயில்களின் உபரி நிதியை அரசின் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை கோரி வழக்கு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் உள்ள முக்​கிய கோயில்​களின் உபரி நிதியை தமிழ்​நாடு மின்​விசை நிதி மற்​றும் அடிப்​படை வசதி மேம்​பாட்டு நிறு​வனம், தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்து வளர்ச்சி நிதி கழகத்​தில் முதலீடு செய்​யும் வகை​யில் அறநிலை​யத் துறை சட்​டத்​தின் முதலீட்டு விதி​களில் திருத்​தம் செய்து அறநிலை​யத் துறை கடந்த பிப்​ர​வரி​யில் அரசாணை பிறப்​பித்​தது.

இந்த அரசாணையை ரத்து செய்​யக்​கோரி​யும், கோயில் நிதியை வங்கி சாரா நிதி நிறு​வனங்​களில் முதலீடு செய்ய தடை விதிக்​கக்​கோரி​யும் ஆலயவழி​பாட்​டாளர் சங்​கத் தலை​வ​ரான சென்னை மயி​லாப்​பூரைச் சேர்ந்த டி.ஆர்​.ரமேஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், கோயில் சொத்​துகளை​யும், நிதி​யை​யும் பாது​காக்​கும் நோக்​கில்​தான் அறநிலை​யத் துறை சட்​டம் இயற்​றப்​பட்​டது. ஆனால் அறநிலை​யத்துறை, சட்​டத்​துக்​குப் புறம்​பாக அந்த நிதியை அரசின் வங்கிசாரா நிதி நிறு​வனங்களில் முதலீடு செய்​வது என்​பது ஏற்​புடையதல்ல.

எனவே கோயில் நிதியை அரசின் நிதி நிறு​வனங்​களில் முதலீடு செய்​ய தடை விதிக்க வேண்​டும். அத்​துடன் இது தொடர்​பான அரசாணை​யை​யும் ரத்து செய்ய வேண்​டும், எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ரவி சேஷாத்​ரி, வழக்​கறிஞர் பி.ஜெகந்​நாத் ஆகியோர் ஆஜராகி, ``தமிழகம் முழு​வதும் உள்ள பிரபல கோயில்​களின் உபரி நிதி​யான ரூ.2 ஆயிரத்து 700 கோடி சட்ட விரோத​மாக அரசின் வங்கி சாரா நிதி நிறு​வனங்​களில் முதலீடு செய்​யப்​பட்டு இருப்​பது, கோயில் நிதியை அரசின் அன்​றாட செல​வினங்​களுக்கு மடை​மாற்​றம் செய்​வது போல் உள்​ளது.

அந்த முதலீடு பாது​காப்​பான​தா, கோயில் நிதி வட்​டி​யும், முதலு​மாக எப்​போது சம்​பந்​தப்​பட்ட கோயில்​களுக்கு திருப்​பிச் செலுத்​தப்​படும் என எந்த உத்​தர​வாத​மும் கிடை​யாது. எனவே இதன்​மூலம் கோயில்​களுக்கு ஏற்​பட்​டுள்ள இழப்பை ஈடு​செய்ய தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்'' என வாதிட்​டனர்.

அதையடுத்து நீதிப​தி​கள், இந்த விவ​காரம் தொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள், தமிழ்​நாடு மின்​விசை நிதி மற்​றும் அடிப்​படை வசதி மேம்​பாட்டு நிறு​வனம், தமிழ்​நாடு போக்​கு​வரத்து வளர்ச்சி நிதி கழகம் மற்​றும் ரிசர்வ் வங்கி நிர்​வாகம் ஆகிய​வை பதிலளிக்​க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை அடுத்​த வாரத்​துக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

தமிழக கோயில்களின் உபரி நிதியை அரசின் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை கோரி வழக்கு
லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு: சவுமியா சுவாமிநாதனுக்கு தலைவர்கள் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in