லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு: சவுமியா சுவாமிநாதனுக்கு தலைவர்கள் வாழ்த்து

லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு: சவுமியா சுவாமிநாதனுக்கு தலைவர்கள் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: உல​கப் புகழ் பெற்ற வேளாண் விஞ்​ஞானி​யான எம்​.எஸ்​.சு​வாமி​நாதனின் மகளான சவுமியா சுவாமி​நாதன் லண்டன் ராயல் சொசைட்டி உறுப்​பின​ராக தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். அவருக்கு அரசி​யல் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: உலக நல நிறு​வனத்​தின் தலைமை விஞ்​ஞானி​யாக செயல்​பட்​டு, கோவிட் 19 பெருந்தொற்று காலத்​தில் உலக மக்​களுக்கு அறி​வியல் ரீதி​யாக வழி​காட்​டிய, இந்​திய மருத்​துவ ஆராய்ச்சி நிறு​வனத்​தின் தலை​வ​ராக சிறப்​பாகப் பணி​யாற்​றிய, வேளாண்மை விஞ்​ஞானி​யான எம்​.எஸ்​.சு​வாமி​நாதனின் மகளான டாக்​டர் சவுமியா சுவாமி நாதன் - லண்​டன் ராயல் சொசைட்டி உறுப்​பின​ராக தேர்வு செய்​யப்​பட்ட செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்​கிறது.

இந்​தி​யக் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தமிழ்​நாடு மாநில செயற்​குழு அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறது.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: உலகின் பழமை​யான அறி​வியல் அகாட​மிகளில் ஒன்​றான பிரிட்​டன் ராயல் சொசைட்டி அமைப்​பின் உறுப்​பின​ராகத் தேர்​வாகி​யிருக்​கும் விஞ்​ஞானி சவுமியா சுவாமி​நாதனுக்கு எனது மனமார்ந்த நல்​வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

அறி​வியல், சுகா​தா​ரம் மற்​றும் உலகளா​விய நெருக்​கடி மேலாண்மை ஆகிய​வற்​றைத் திறம்​படக் கையாண்டு பொது சுகா​தா​ரத் துறைக்கு பெரும் பங்​களிப்பை வழங்​கிய சவுமியா சுவாமி​நாதனின் அறி​வியல் மற்​றும் ஆராய்ச்​சிப் பணி​கள் மேன்​மேலும் சிறக்க மீண்​டும்​ ஒரு​முறை வாழ்த்​தி மகிழ்​கிறேன்​.

லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு: சவுமியா சுவாமிநாதனுக்கு தலைவர்கள் வாழ்த்து
தென்காசி பகுதியில் சூரியனை சுற்றி ஒளி வட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in