கிறிஸ்தவ மதத்தில் இருந்து மீண்டும் இந்துவாக மாறியவருக்கு எஸ்.சி சான்று பெற உரிமையுள்ளது: ஐகோர்ட்

சென்னை உயர்நீதிமன்றம் | கோப்புப் படம்
சென்னை உயர்நீதிமன்றம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கிறிஸ்தவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்துக்கு மாறியவரை, அந்த சமூகம் ஏற்றுக் கொண்டதால், எஸ்.சி. சான்று பெற மனுதாரருக்கு உரிமையுள்ளது எனக் கூறி, அவரை கிறிஸ்தவர் எனவும், அவரது சாதிச் சான்று உண்மையானதல்ல என்றும் மாவட்ட கண்காணிப்புக் குழு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், சுங்கத்துறையில் பணிக்கு சேர்ந்து உதவி ஆணையராக பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவரது சாதிச் சான்றிதழ் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்கு பின், ரவிக்குமாரும், அவரது குடும்பத்தினரும் நல்ல நிறமாகவும், உயரமாகவும், நல்ல உடற்கட்டுடனும், தமிழ் - ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பேசுவதாகக் கூறி, அவர் கிறிஸ்தவர் எனவும், அவரது எஸ்.சி. சாதிச் சான்று உண்மையல்ல எனவும் மாவட்ட கண்காணிப்புக் குழு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்தும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சுங்கத்துறைக்கு தடை விதிக்கக் கோரியும், ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, கிறிஸ்தவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்துக்கு மாறியவரை, அந்த சமூகம் ஏற்றுக் கொண்டதால், எஸ்.சி. சான்று பெற மனுதாரருக்கு உரிமையுள்ளது எனக் கூறி, அவரை கிறிஸ்தவர் எனவும், அவரது சாதிச் சான்று உண்மையானதல்ல என்றும் மாவட்ட கண்காணிப்புக் குழு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மனுதாரர் இந்து கடவுளை வழிபட்டாரா, இந்து சமூகத்தினர் அவரை ஏற்றுக் கொண்டார்களா என்று மாவட்ட குழு ஆராய்ந்திருந்தால், அது சரியானது. ஆனால், நல்ல மாநிறமாக, உயரமாக, சுருட்டை முடியுடன், நல்ல உடற்கட்டுடன், தமிழ் - ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதால் அவர் கிறிஸ்தவர் என முடிவுக்கு வந்தது பொருத்தமற்றது என நீதிபதி, தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மனுதாரரின் சாதிச் சான்று குறித்து மீண்டும் விசாரணை நடத்தி, எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்

சென்னை உயர்நீதிமன்றம் | கோப்புப் படம்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அக்டோபரில் முதல்வர் விஜய், செப்.24 முதல் பழனிசாமி பிரச்சாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in