தமிழகம் முழுவதும் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் முழுவதும் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி
Updated on: 
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் 128 இடங்​களில் ஆர்​எஸ்​எஸ் சார்பில் அக்​.25 மற்றும் நவ.1 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஊர்​வலம் நடத்த அனு​மதி வழங்கி உயர் நீதி​மன்றம் உத்​தர​விட்​டுள்​ளது.

ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் நிறுவன தினத்தை முன்​னிட்டு தமிழகம் முழு​வதும் 128 இடங்​களில் அக்​.18, அக்​.25, நவ.1 ஆகிய நாட்​களில் ஏதேனும் ஒரு​நாளில் அணிவகுப்பு ஊர்​வலம் நடத்த அனு​மதிக்க கோரி ஆர்​எஸ்எஸ் அமைப்​பின் மாநிலச் செய​லா​ளர் ஜெகதீசன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, ‘அக்​.25, நவ.1 ஆகிய தேதி​களில் அணிவகுப்பு நடத்த அனு​மதி வழங்​கப்​படும்’ என தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றம் வகுத்த விதி​முறை​கள் கடைபிடிக்​கப்​படும் என ஆர்​எஸ்​எஸ் தரப்​பிலும் உத்​தர​வாதம் அளிக்​கப்​பட்​டது.

அதை பதிவு செய்​து​கொண்ட நீதிப​தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஒவ்​வொரு ஆண்​டும் ஆர்​எஸ்எஸ் சார்​பில் அணிவகுப்பு ஊர்​வலம் நடத்த அனு​மதி கோரி நீதி​மன்​றத்தை நாட வேண்​டிய சூழல் உள்​ளது. இனி​யும் அது​போன்ற சூழல் ஏற்படக் கூ​டாது. ஆர்​எஸ்​எஸ் அணிவகுப்பு ஊர்​வலம் மற்​றும் அதைத் தொடர்ந்து நடத்​தப்​படும் பொதுக்​கூட்​டங்​களுக்கு போலீ​ஸார் அக்​.19-க்​குள் அனு​மதி வழங்க வேண்​டும். அதே​போல, உயர் நீதி​மன்​றம் விதித்​துள்ள நிபந்​தனை​களை ஆர்​எஸ்​எஸ் கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி மறுத்து கடந்த 2023-ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை பின்னர், உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்போதைய மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அந்த ஆண்டு 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி
குழந்தைகளைப் பயன்படுத்தி தவெகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது மலிவான அரசியல் உள்நோக்கம் கொண்டது: உயர் நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in