அட்சய திருதியை முன்னிட்டு நகைக் கடைகளில் குவிந்த மக்கள்

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள நகைக் கடையில் நகைகள் வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள் கூட்டம்.படம்: எஸ்.சத்தியசீலன்

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள நகைக் கடையில் நகைகள் வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள் கூட்டம்.படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
1 min read

சென்னை: அட்சய திரு​தியை ஒட்​டி, நகைக்கடைகளில் பொது​மக்​கள் குவிந்​தனர். பெரும்பாலோர் எடை குறை​வான தங்க ஆபரணங்​கள், நாண​யங்​களை வாங்க ஆர்​வம் காட்​டினர்.

அட்சய திரு​தியை நாளில் தங்​கம் மற்​றும் வெள்ளி நகைகள் வாங்​கு​வது பொது​மக்​களின் வழக்​க​மாக உள்​ளது. இந்த ஆண்​டுக்​கான அட்சய திருதியை நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் பொது​மக்​கள் குவிந்​தனர்.

சென்னையில் தி. நகர், புரசை​வாக்​கம், பாரி​முனை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் உள்ள கடைகளில் காலை முதலே மக்கள் ஆர்வமாக நகைகளை வாங்கினர். இது குறித்​து, நகை வியா​பாரி​கள் சங்க நிர்​வாகி​கள் கூறிய​தாவது: அட்சய திரு​தியை கொண்​டாட்​டத்​தையொட்​டி, தமிழகம் முழு​வதும் 35 ஆயிரம் நகைக் கடைகள் காலை 8 மணிக்கே திறக்​கப்​பட்​டன. தியாக​ராய நகரில் உள்ள நகைக் கடைகளில் வழக்​க​மான மக்​கள் கூட்​டம் காணப்​பட்​டது.

அதே​நேரத்​தில், எடை குறைந்த ஆபரணங்​கள், நாண​யங்​களை அதிக அளவில் வாங்​கினர். இருப்​பினும், கடந்த ஆண்டை விட மக்​கள் வருகை சற்று குறை​வாக இருந்​தது. இதற்கு காரணம். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தான். தேர்​தல் விதி​முறை​கள் காரண​மாக, பணத்தை எடுத்து வரமுடி​யாது என்ற பயம் இருக்​கிறது. இரண்டு நாள் அட்சய திரு​தியை இருப்​ப​தால், திங்​கள்​கிழமை​யும் நகைகளை வாங்க வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கிறோம். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

<div class="paragraphs"><p>அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள நகைக் கடையில் நகைகள் வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள் கூட்டம்.படம்: எஸ்.சத்தியசீலன்</p></div>
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சீரிய வெற்றி யாருக்கு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in