நிறுவனங்களில் மழைநீர் தேங்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

கடந்த 10 மாதங்களில் 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு
நிறுவனங்களில் மழைநீர் தேங்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை
Updated on: 
1 min read

சென்னை: பெரு நிறு​வனங்​கள் தங்​களது வளாகத்​தை அதி​களவு மழைநீர் தேங்​கும் வகை​யில் அலட்​சி​ய​மாக வைத்​திருந்​தால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​படும் என சுகா​தா​ரத்​துறை அமைச்சர் அருண்​ராஜ் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

சென்னை மாநக​ராட்சி சார்​பில் வடபழனி, கெங்​கை​யம்​மன் கோயில் தெரு​வில் காய்ச்​சல் தடுப்பு சிறப்பு மருத்​துவ முகாம் நேற்று நடை​பெற்​றது. இந்த முகாமை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். அப்​பகு​தி​யில் உள்ள வீடு​களுக்கு சென்று டெங்கு தடுப்பு நடவடிக்​கைகளை​யும் பார்வை​யிட்​டு, பொது​மக்​களுக்கு விழிப்​புணர்வு துண்​டுப்​பிரசுரங்களை வழங்​கி​னார்.

பின்​னர், அவர் கூறிய​தாவது: டெங்கு தடுப்பு நடவடிக்​கை​யின் முக்​கிய பகு​தி​யாக கொசுப்​புழு உற்​பத்​தி​யாகும் இடங்​களை அழிக்​கும் முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இதற்கு பொது​மக்​களின் ஒத்​துழைப்​பும் கண்​டிப்​பாக அவசி​யம். அனை​வரும் தங்​கள் வீட்​டுக்​குள்​ளும், வீட்​டைச் சுற்​றி​லும், குறிப்​பாக மொட்டை மாடி​யிலும் சென்று பாருங்​கள். தேவையற்ற பாத்திரங்கள், சிறிய தொட்​டிகள், மூடி, ஆட்​டுக்​கல், பயன்படுத்தாத பூந்​தொட்​டிகள் என எது​வாக இருந்​தா​லும், மழைநீர் தேங்​கக் கூடிய வாய்ப்​புள்​ளவற்றை அப்புறப்படுத்துங்கள்.

பெரிய நிறு​வனங்​கள், கட்​டு​மான நிறு​வனங்​கள் மற்​றும் பெரு நிறுவன அமைப்​பு​கள் தங்​கள் வளாகங்​களை மழைநீர் தேங்​கும் வகை​யில் அலட்​சி​ய​மாக வைத்​திருந்​தால் உடனடி​யாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​படும். மீண்​டும் அது தொடர்ந்​தால் கூடு​தல் அபராதம் விதிக்​கப்​படும். சென்னை மாநக​ராட்சி சார்பில் கடந்த 2 மாதங்​களில் மட்​டும் ரூ.7.50 லட்​சம் வரை அபராதம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. பலமுறை எச்​சரித்​தும் நடவடிக்கை எடுக்​காத வீடு​களுக்​கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்​தில் கடந்த ஜன.1 முதல் அக்​.7-ம் தேதி வரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இது​வரை 10 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். தற்​போது 301 பேர் டெங்கு பாதிப்​பால் உள்​ நோ​யாளி​களாக சிகிச்​சை​யில் உள்​ளனர். சென்​னை​யில் கொசு ஒழிப்​புப் பணி​களுக்​காக சென்னை மாநக​ராட்​சி​யில் மட்டும் 3,700 கொசு ஒழிப்​புப் பணி​யாளர்​கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்த ஆய்​வின்​போது, மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன், துணை ஆணை​யர் (சு​கா​தா​ரம்) தாக்​கரே சுபம் ஞானதேவ்​ராவ், மத்​திய வட்​டார துணை ஆணை​யர் எச்​.ஆர்​.க​வுஷிக், பொது சுகாதா​ரம், நோய்த் தடுப்பு மருந்​துத்​துறை கூடு​தல் இயக்​குநர் சம்பத் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

நிறுவனங்களில் மழைநீர் தேங்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை
தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டலத்தில் குடிநீர் தட்டுப்பாடு- 6 மாதங்களாக தவிக்கும் மக்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in